Analysis
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 07 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மென்பொருள் - பாரிய முட்டாள்...
Jun 16, 2022
நாம் சந்தித்த மிகவும் முட்டாள்தனமான ஒரு மென்பொருள் கோரிக்கை பற்றி அறிய வாருங்கள்!

Dionysus, the Greek god of madness (among other things): from the Villa of Dionysus (second century AD) in Dion, Greece. Image from Wikimedia Commons.

குறிப்பு: வாசகர் கோரிய விளக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், 6/17/2022 காலை 11:30 மணிக்கு கட்டுரை புதுப்பிக்கப்பட்டது.

ஒரு சிறிய பின்புலம்

ERP என்றால் என்ன?

SPC தனது ERP மென்பொருளின் ஊடாக அடைய முனைவது என்ன?

துரித கணிப்பீடுகளும் துரித கேள்விகளும்

முட்டாள்தனமா அல்லது தீய நோக்கமா?

அடிக்குறிப்புகள்

ஒரு சிறிய பின்புலம்

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) அண்மையில் அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவுக்கு (COPE) விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் ஊடகங்களின் பேசுபொருளாக மாறியிருந்தது.

குறிப்பாக, அவர்களின் செயற்பாடுகள் பற்றி விசாரிக்கப்பட்ட வேளை, தமது ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கான மென்பொருள் தொடர்பில் தமக்கு 7 பில்லியன் ரூபாய்கள் தேவை எனக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே காணப்படும் மென்பொருள் செயற்பாடு அற்றதாகக் காணப்படுகின்றது. இந்த செயலற்ற மென்பொருளை உருவாக்க ரூபாய் 644 மில்லியன் 7 வருட காலப்பகுதியில் (2008 – 2015) செலவிடப்பட்டிருந்தது, Readme.lk குறிப்பிடுவதைப் போன்று, இது ஒரு பாரிய தொகையாகக் காணப்படுகின்றது – “இது இலங்கையின் பிரதான மென்பொருள் உற்பத்தி நிறுவனமான hSenid இன் மொத்த பங்குகளின் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் ரூபாய்களே குறைவானதாகும்”.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் பாரிய பொருட்பட்டியல் முகாமைத்துவ பிரச்சினைகள் மிக்கதாகக் காணப்படுகின்றது: 2011 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியில் 6,259 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேற்கொண்ட பொருத்தமற்ற களஞ்சியப்படுத்தல் நடவடிக்கைகளால் தரத்தை இழந்தன

தற்போது, இந்த 644 மில்லியன் ரூபாய்கள் என்பது விவாதத்துக்கு உரிய விடயமாக மாறியுள்ளது. இத்தொகையை இந்த மென்பொருளை வழங்கிய e-Wis நிறுவனம் சவாலுக்கு உட்படுத்துகின்றது. இந்த பொருளாதார நெருக்கடிமிக்க கால கட்டத்தில் இந்த இரண்டு தரப்பும் குறிப்பிடும் தொகைகளும் மிகப் பாரிய தொகைகளாகவே உள்ளன.

இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தியது: மிகவும் கடினமாக கேள்விகளைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா இதனைக் “குற்றச் செயல்” என விபரித்தார். கோப் குழுவின் தலைவர் கலாநிதி சரித ஹேரத் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் “பொருட் பட்டியல் முகாமைத்துவம், கொள்வனவு முகாமைத்துவம் மற்றும் தேவை மதிப்பீடு” ஆகிய அனைத்தையும் கையாளும் வகையில் அமைந்த மென்பொருளை உருவாக்கி வழங்குமாறு இலங்கையின் தொழில்நுட்ப சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

நாம் பிரசித்தமாகக் கூறுவதைப் போன்றே, இவ்விடயங்களை மேற்கொள்வதற்கு தேவையான மென்பொருள் உருவாக்கப்படக் கூடியது என்பதுடன் அந்த மென்பொருளை மிகவும் குறைந்த செலவிலேயே மேற்கொள்ளலாம். உண்மையில் மிகவும் அசாதாரண விடயமொன்று வேகா இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் பணிப்பாளரான கலாநிதி பெஷான் குலபாலவினால் சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே காணப்படும் “644 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான முறைமைக்கு” பதிலாக புதிய முறைமை ஒன்றை 100 மில்லியன் ரூபாய்கள் செலவில் வழங்குவதற்காக லூன்ஸ் லேப் என்ற மிகவும் புதியதொரு கம்பனிக்கு ஏற்கனவே கேள்வி மனு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். [1]

எம்மிடம் உள்ள கேள்வி இதுதான்: இந்த 7 பில்லியன் ரூபாய்கள் என்ற பாரிய தொகையை எவ்வாறு நியாயப்படுத்துவது? இந்த பாரிய தொகையை நியாயப்படுத்த SPC, MSD மற்றும்/அல்லது சுகாதார அமைச்சு கேட்டது என்ன?

இந்த விடயத்தில் குறிப்பான விடயங்களை அறிந்து கொள்வதற்காக SPC நிறுவனத்துக்கு தேவையான அந்த மென்பொருளின் பரந்த பிரிவைப் பற்றி நோக்குவோம்: அது ERP (Enterprise Resource Planning / நிறுவன வளத் திட்டமிடல்) மென்பொருளாகும்.

ERP என்றால் என்ன?

ERP என்பது பாரிய நிறுவனங்களுக்கு பொருத்தமான கட்டளை – மற்றும் - கட்டுப்பாட்டு வடிவில் அமைந்த கணினி செயலிகளாகும்.

இதன் தோற்றம் 1964 ஆம் ஆண்டு Black & Decker என்ற கருவிகள் உருவாக்கும் நிறுவனம் தனது உற்பத்தி செயற்பாட்டுக்கு கணினி மயப்படுத்தப்பட்ட அட்டவணை முறைமை ஒன்றை பயன்படுத்தியதன் மூலம் ஆரம்பமானது. அடுத்து வந்த தசாப்தங்களில் கணினியியல் வியாபாரத்தின் பல அம்சங்களைக் கையாளும் விதத்தில் விருத்தியடைந்தது: நிதியியல், பொருட்பட்டியல் கட்டுப்பாடு, கணக்கீடு, வழங்கல் சங்கிலி முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் கணினியின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டன. 1990களில் மென்பொருள் வர்த்தகர்கள் இவற்றுக்கு தனித்தனியான நிரலாக்கங்களை உருவாக்கி அவற்றை ஒரு தொகுதியாக இணைத்து விற்பனையில் ஈடுபட்டனர். கம்பனி ஒன்று மேற்கொள்ளும் கிட்டத்தட்ட அனைத்து செயற்பாடுகளையும் ஒற்றை மென்பொருளினால் கையாள இயலும் என்ற எண்ணக்கரு இங்கு காணப்பட்டது.

ERP என்பது பாரிய வர்த்தக அமைப்புகள் தமது அடிப்படை செயற்பாடுகள் அனைத்தையும் ஓரிடத்திலேயே கையாள்வதை இயலுமாக்கும் பாரிய ஒற்றை மென்பொருள் ஆகக் காணப்பட்டது. தற்காலத்தில் ERP மென்பொருட்கள் பாரிய சிக்கல் தன்மை மிக்கனவாகக் காணப்படுகின்றன. மேலும், மென்பொருள் வர்த்தகம் கூட பாரிய கம்பனி நடவடிக்கைகளாக உள்ளன.

அதிகமான வர்த்தக ERP முறைமைகள் மிகவும் பாரியனவாகவும் சிக்கல் தன்மை வாய்ந்தனவாகவும் காணப்படுவதுடன் அவற்றை கம்பனிகளில் பொருத்துவதற்கு மற்றும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பதற்கு பல மென்பொருட் கம்பனிகளின் மென்பொருள் பொறியியலாளர்கள் (முறைமை இணைப்பாளர்கள் எனவும் அறியப்படுவர்) பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

“இது UNIX இன் தத்துவமாக காணப்படுகின்றது: ஒரு விடயத்தை மாத்திரம் செய்யும் மற்றும் அதனை சிறப்பாக செய்யும் மென்பொருள் நிரலாக்கங்களே எழுதப்பட வேண்டும்… சிக்கல்தன்மைகளை அழகாக்குவது மற்றும் தீவிரமாக்குவது பொருத்தமற்ற செயலாகும்” - டௌக் மெக்ரோலி, Bell Labs கணினி விஞ்ஞான ஆய்வு நிலையத்தின் தலைவர்

சுருங்கக் கூறுவதாயின், இவை மெக்ரோலியின் UNIX நிரலாக்கங்களுக்கு முற்றிலும் மாறுபட்டனவாகும். மென்பொருள் உருவாக்கத்தில் குறிப்பிட்ட வடிவமைப்பே காணப்பட வேண்டும் என நாம் இங்கு கூறவில்லை, மாறாக ERP முறைமை என்பது வடிவமைப்பு ரீதியாக மிகவும் பாரியது என்பதை விளக்கவே இதனைக் கூறுகின்றோம்.

Frankenstein’s monster. WikiMedia Commons.

SPC தனது ERP மென்பொருளின் ஊடாக அடைய முனைவது என்ன?

இக்கேள்விக்கான விடையைக் காண்பதற்காக, நாம் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 2021 இல் வெளியிட்ட முன்மொழிவுகளுக்கான கோரிக்கை (RFP) ஒன்றின் பிரதியை பெற்றுக்கொண்டோம். ஏழு பில்லியன் ரூபாய்கள் பெறுமதி மிக்க மென்பொருள் முறைமை எதற்காக தேவைப்படுகின்றது என்பதை அறிவதற்கு காணப்படும் மிக தொடர்புடைய ஆவணமாக இது அமைகின்றது. இதில் SPC உடன் தொடர்புடைய பல தரப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன: SPC நிறுவனம் மேற்கொள்ளும் கொள்வனவுகள், மருத்துவ வழங்கல்கள் பிரிவு (MSD), கிட்டத்தட்ட அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் இதில் உள்ளடங்குகின்றது.

அந்த ஆவணத்தின் PDF வடிவம் இங்கே உள்ளது. அது பிரதி பண்ண முடியாத ஏற்பாடுகளைக் கொண்டதாகக் காணப்பட்ட போதும் அதனை நாம் முறைமைகளைப் பயன்படுத்தி பிரதி பண்ண முடியுமானதாக ஆக்கினோம்.

IT ERP2021-unlocked.pdf 1804542

முதலாவதாக, SPC எதைக் கோருகின்றது என்பதை துல்லியமாகப் புரிந்து கொள்ள நாம் அவ்வாவணத்தின் 183 பக்கங்களையும் வாசித்தோம்.

அதன் பின்னர் நாம் பின்வரும் முறைமையைப் பயன்படுத்தினோம்:

  1. அதன் பின்னிணைப்பு 03 மற்றும் ஏனை தொழில்நுட்ப குறிப்புகளை பிரித்தெடுத்து அவற்றை கோரும் பிரிவு / உப முறைமைகளுக்கு ஏற்ப தொகுதிகளாக்கினோம்.
  2. ஒவ்வொரு குறிப்பிட்ட திணைக்களத்தின் கீழ் வரும் பொருட்களை வாசித்தல்
  3. சிவப்புக் கொடிகளை ஒதுக்குதல். சிவப்புக் கொடிகள் என்பது அசாதாரண நிலைகள் குறித்து அறிவிக்கும் முறைமையாகும். அவை கலாநிதி சரித ஹேரத் கோரிய “பொருட்பட்டியல் முகாமைத்துவம் மற்றும், கொள்வனவு முகாமைத்துவம் மற்றும் தேவை மதிப்பீடு” என்பவற்றுக்கு வெளியே அமைந்துள்ள விடயங்களாகும். சீருடைகள் மற்றும் பால்மா என்பவற்றை சோதனை செய்வது இன்றைய தேவையாக அமைந்துள்ளது என ளுPஊ நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறக் கூடும். இது இருதடவைகள் சோதனை; செய்யப்பட வேண்டிய விடயங்கள் நாம் கூறும் விடயங்களே ஆகும்.
  4. இவ்வாறாக ஒவ்வொரு திணைக்களத்திலும் உருவாகும் அசாதாரண நிலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு வகை பிரிக்கப்படும். குறிப்பிட்ட பகுதி ஒன்றை வாசிக்கும் வேளை, அவற்றில் உள்ள விடயங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும் (குறைவு, நடுத்தரம் மற்றும் உயர்வு).

The process of digging out these gems.

திணைக்களங்கள் மேற்கொண்ட கோரிக்கைகள் மற்றும் அவற்றுக்கான புள்ளிகள் என்பன கீழுள்ள இணைப்பில் உள்ள ஆவணத்தில் பிரசித்தமாக கருத்துக்களையும் சேர்க்கக் கூடிய விதத்தில் காணப்படுகின்றன.

எமது கருத்து: பல நூறு மில்லியன் ரூபாய்களை ஏற்கனவே SPC மென்பொருளில் விரயம் செய்துள்ளது. வடிவமைப்பு ரீதியில் நோக்கும் வேளை, அவர்களின் புதிய 7 பில்லியன் பெறுமதியான மென்பொருள் நிறைவேற்றப்பட முடியாத கோரிக்கையாகவே காணப்படுகின்றது. நாம் இதுவரை அறிந்துள்ள விபரக்குறிப்பு தாள்களிலேயே (Specification Sheet) மிகவும் சிக்கல் வாய்ந்த விபரக்குறிப்பு தாளாக SPC வழங்கிய தாள் காணப்படுகின்றது.

Hercules and the Lernaean Hydra, from Etruria, attributed to the Painter of Aquila, 530-500 BCE. By Carole Raddato, 2014, under Creative Commons Attribution-ShareAlike.

இதுவரை எழுப்பப்பட்டுள்ள சிவப்புக் கொடிகளுள் நாம் அவதானித்த சில முக்கிய விடயங்களை நோக்குவோம். எமது கருத்துக்கள் கீழே நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன:

  1. திணைக்களங்கள் இடையான பால்மா பயன்பாடு – ‘கட்டுப்படுத்தக் கூடிய பொருட்களை (பாலமா, சீனி போன்றன) திணைக்களங்களுக்கு வழங்கும் வேளை அவற்றின் பயன்பாட்டு எல்லைகள் மீறப்படும் வேளை அவற்றை அடையாளம் காணும் வசதியை குறித்த திணைக்களங்கள் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இது ஏன் முதலாவது கோரிக்கைளுள் ஒன்றாக உள்ளடங்குகின்றது? மேலும், இதற்கு எதற்காக மென்பொருள் அவசியமாகின்றது?
  2. வாகனம் நிறுத்தும் இடங்களின் கிடைக்கும் தன்மை. ஏன் இது ஒரு சிக்கல் மிக்க பிரச்சினையாகக் காணப்படுகின்றது? இதற்கு உங்களுக்கு பல iழுவு வன்பொருட்கள் தேவைப்படலாம் அல்லது வாகனங்கள் நிறுத்தப்படும் மற்றும் அகற்றப்படும் வேளைகளில் அவற்றை குறிப்பெடுக்கும் மனிதப் பணி தேவைப்படலாம. இந்நோக்கத்துக்காக தனியான வாகன நிறுத்த முகாமைத்துவ முறைமை மென்பொருட்கள் (4Park போன்றன) காணப்படுகின்றன.
  3. வாகன நிறுத்தற் கட்டணங்கள். வாகன நிறுத்தற் கட்டணங்கள் SPC இன் வியாபார மாதிரியின் அடிப்படை பகுதிகளுள் ஒன்றாக உள்ளதா? அவ்வாறெனில், உடனடியாக நிறுவனத்தின் பெயரை அரச வாகன நிறுத்தற் கூட்டுத்தாபனம் என மாற்றுங்கள்.
  4. வாகனம் மற்றும் வாகனச் சாரதிகளின் கிடைக்கும் தன்மை. இதனை வரவுப் பதிவேட்டு கண்காணிப்பு முறைமையுடன் இணைத்து மேற்கொள்ளலாம். இதனையே Uber/PickMe/Lyft/Grab போன்ற நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.
  5. வாகன எரிபொருள், பழுதுபார்ப்பு, மின்கலம் மற்றும் குளிரூட்டியின் நிலைகள். இவை அனைத்தும் வாகனங்களுடன் இணைந்த விடயங்களாக அமைகின்றன. •வாகன விபரங்களை பேணுவதற்கான வசதி (வாகன இல. வகை, பதிவுத் திகதி, குழு அல்லது பணியாளர்கள், திணைக்களம் போன்ற விடயங்கள்)பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சேவை விபரங்களைப் பேணும் வசதி (பழுதுபார்ப்பு, செலவு, போன்ற விடயங்கள்) • வாகன அனுமதிப்பத்திர காலாவதித் திகதி, மின்கல காலாவதி, வாகன குளிரூட்டி காலாவதி, பராமரிப்பு சேவைத் திகதிகள் போன்றவற்றை அடையாளம் காண்பதை முறைமை இலகுவாக்க வேண்டும். • மாதாந்த வாகன ஓட்ட பதிவுகளை பதிவு செய்யும் வசதி (மாதாந்த மைல் கணக்கு) இது Uber நிறுவனம் மேற்கொள்ளும் செயற்பாட்டை விடவும் அதிகமானது. டெஸ்லா நிறுவனத்தின் செயற்பாட்டை போன்று ஒவ்வொரு சாரதியும் டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் இணைப்புக்கு ஒத்தவராகக் காணப்பட வேண்டும் அல்லது அவர்கள் தரவுப் பதிவு இயக்குனர்களாக பகுதி நேரப் பணி மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம். இந்தப் பிரச்சினைக்கு ஏன் இவ்வளவு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்?
  6. உத்தரவாதம், சேவைப் பராமரிப்பு விபரங்கள் உள்ளடங்கலாக அலுவலக கருவிகளின் பழுதுபார்ப்பு விபரங்கள் மற்றும் அறிவிப்புகள் வழங்குதல். இவ்வாறான சேவைகளை வழங்குவதற்காக Coast, Asset Panda, ProntoForms மற்றும் eZOfficeInventor போன்ற சொத்து முகாமைத்துவ மென்பொருட்களை வழங்கும் கம்பனிகள் உள்ளன.
  7. கேள்விப்பத்திரங்கள். கேள்விப்பத்திர அழைப்புக் கடிதங்களைத் தயாரித்தல் மற்றும் கேள்விப்பத்திரங்களை பதிவு செய்தல், கேள்விப்பத்திரங்கள் தொடர்பான கூட்டங்களின் அறிக்கைகளைப் பதிவு செய்தல், கேள்விப்பத்திர விளம்பரங்களுக்கான அச்சுப் பிரதிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை இணையத்தளத்தில் வெளியிடல். இது பல திணைக்களங்கள் இடையே தோன்றும் விடயமாகும். இவ்வசதி பல திணைக்களங்களுக்கு அவசியப்படும் ஒன்றாகக் காணப்படுகின்றது. எனினும், இவ்விடயத்தில் விசேடத்துவம் மிக்க வேறான அமைப்பு ஒன்றும் SPC நிறுவனத்தினுள் காணப்படுகின்றது (கொள்வனவு முகாமைத்துவம்), அதன உப பிரிவு ஒன்று இந்த தொடர் செயன்முறை சம்பந்தமான விபரங்களை வழங்குகின்றது. எம்மிடம் கிடைக்கும் சிக்கல் தன்மை மிக்க கேள்விப்பத்திரங்களைக் கருதும் வேளை, அதனை இலகுவாக்க SPC இந்த உப பிரிவைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய முடியும். எவ்வாறாயினும், கேள்விப்பத்திரங்களை உருவாக்கும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் மென்பொருள் மிகவும் சிக்கல் தன்மை மிக்க விடயமாகக் காணப்படுவதுடன் அதற்கென மிகவும் விசேடத்துவம் மிக்க மென்பொருட்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, RIB என்பது ஜேர்மன் அரசாங்கத்தின் பல அமைப்புகளால் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருளாகும். இதனை திறம்பட செய்யும் மென்பொருள் ஒன்றை உருவாக்குவது மிகவும் சிரமமான விடயமாகும். மேலும், விளம்பரங்கள் ஏன் உருவாக்கப்பட வேண்டும்? அதற்கு Adobe InDesign / Canva போன்றவற்றின் செயற்பாடு ஏன் தேவைப்படுகின்றது?
  8. “உயர் பெறுமதிமிக்க கட்டுமானப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தல். புதிய ஒசுசல மற்றும் ஏனைய திணைக்களங்களின் உள்ளகக் கட்டமைப்புகளின் இடஅமைவு மற்றும் வடிவமைப்பைத் திட்டமிடல்”. (மற்றும் அதே விவரக் குறிப்பில்): “துப்பரவு சேவைகளைக் கையாளல் - துப்பரவுப் பணியாளர்கள் முன்னெடுக்கும் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தல். ”எப்போது இது CAD மென்பொருளாக மாற்றமடைந்தது? அத்துடன் இந்த செயலி எவ்வாறு துப்பரவு பணியாளர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்கப் போகின்றது?
  9. விளம்பர விபரங்களை பதிவு செய்யும் வசதி (பெறப்பட்ட திகதி, திணைக்களம், செலவு, வெளியிடப்பட்ட பத்திரிகைகள், வெளியிடப்பட்ட திகதி, விபரம்… போன்ற விடயங்கள்). இதற்கு உங்களால் Trollo (இலவசமானது) அல்லது Google Sheet (இதுவும் இலவசமானது) ஒன்றை உங்களால் பயன்படுத்த முடியாதா?
  10. வர்த்தக இலச்சினை பதிவு விபரங்களைக் கண்டறிதல். இதற்காக தனியான அரச திணைக்களம் ஒன்றே உள்ளது. மேலும், பாரிய அளவில் அமைந்த வர்த்தக இலச்சினைகளைக் (500 இலச்சினைகள் போன்றன) கண்டறிவதற்கான மூன்றாம் தரப்பு மென்பொருட்கள் (IOlite, IPzen போன்றன) உள்ளன. SPC அவ்வாறு அதிக எண்ணிக்கையான வர்த்தக இலச்சினைகளைத் தேடிய அறிய வேண்டிய தேவையற்ற நிறுவனம். எனவே, இவ்விடயம் ஏன் மென்பொருள் உருவாக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்?
  11. திணைக்களங்கள் முன்வைக்கும் நியம கோரிக்கையான டிஜிட்டல் கையொப்பங்கள். இதனை இலகுவாக Adobe Docusign / TinyPDF செயலிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும் என நீங்கள் சிந்திப்பது எனக்கு விளங்குகின்றது.
  12. - சொத்துக்களின் பெறுமதி, தேய்மானம், ஒன்று கூட்டப்படும் தேய்மானம், மற்றும் தேய்மானத்தின் பின்னரான நிகரப் பெறுமதி. - கடன்பட்டோர் விபரங்களை பிரிவு வாரியாக நோக்கும் வசதி - SPC இற்கு கடன்பட்டோர் விடயங்களை நோக்கும் வசதி – பெயர், முகவரி, கடன் எல்லை, காலாவதி விபரங்கள் உள்ளடங்கிய வங்கி உத்தரவாதம், பதிவு போன்றன. - கடன் பெற்ற பணியாளர் விபரங்களை நோக்குவதற்கான வசதி - கடன் வகை, உத்தரவாதிகள், பெறுமதி, கடன் முதிர்ச்சி திகதி - வயது பகுப்பாய்வை (நிதித் திணைக்களத்தினால் கையாளப்படுவது)ழூ நோக்குவதற்கான வசதி. இது ஒரு வங்கியா?
  13. கடன்கள், அனுமதிப் பத்திரங்கள், வரிகள் வாடகை / குத்தகை ஒப்பந்தங்கள். நிலப்பிரபு ஒருவருக்கு அவசியமான மென்பொருளுடன் வங்கிச் செயற்பாடுகளை இணைத்த புதிய வகை மென்பொருள் ஒன்று இங்கு அவசியமாகின்றது.
  14. “விற்பனைத் தகவல்களைப் பயன்படுத்தி உண்மையான மாதாந்த விற்பனையை கணிப்பிட இயலுமாக இருக்க வேண்டும், எனினும் விற்பனை முன்னேற்றம் ஒழுங்கானது அல்ல (தர செயலிழப்பு. அவசர சம்பவங்கள், DHS மாற்றம் போன்றன), எனவே, உண்மையான மாதாந்த சராசரியில் தங்கியிருக்க முடியாது. முறைமை இந்த சூழ்நிலைகளைக் கையாள்வதை இலகுபடுத்துவதாக அமைய வேண்டும்.” இதனை செய்வதற்கு முறைமை உண்மையில் உங்களுக்கு தேவைப்படாது. உண்மையில், அதிக மாறிகள் காணப்படும் நிலையில் முன்னராக வழங்கப்படும் தீர்வுகள் தீங்கான விளைவுகளையே கொண்டு வரும். தொடர் செயன்முறை எந்தளவு சிக்கல்தன்மை மிக்கது என இங்கு நோக்கும் வேளை, தரவுகளை நேரடியாக ஆராய்ந்து சூழமைவுக்கு ஏற்ப எதிர்வு கூறல்களை வழங்கக் கூடிய திறமை மிகுந்த தரவு விஞ்ஞானி ஒருவரின் சேவையை பெற்றுக்கொள்வது இங்கு பொருத்தமாக அமையும். உதாரணமாக, எரிபொருள் நெருக்கடி மிக்க காலப்பகுதியில் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும். எதிர்காலத்தை அறியும் மந்திர சக்தி இல்லாமல் உங்களால் இதனை முன்னரே எதிர்வு கூற முடியாது.
  15. பத்திரிகை விளம்பரங்களை உருவாக்குதல், அவற்றை இணையத்தளங்களில் பிரசுரம் செய்தல், அழைப்பு மற்றும் கேள்விப்பத்திரக் கடிதங்களை தன்னியக்கமாக உருவாக்குதல். Microsoft Word, Canva, Google Docs போன்ற விடயங்களை நீங்கள் கேள்விப்படவில்லையா?
  16. கூட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்தல் மற்றும் கூட்ட அறிக்கைகளை பதிவு செய்தல். அதற்குப் பதிலாக, உங்களால் Notepad இனைப் பயன்படுத்த முடியும்.
  17. “விடயதான இலிகிதர்களை அடையாளம் காணல், அவர்களின் பணி வரலாற்றை அறிதல் மற்றும் தற்போது அந்த இலிகிதரின் பணிச்சுமையை அறிந்து கொள்வதற்கான வசதி (உதாரணமாக, குறைந்த விடயங்களை மேற்கொள்ளும் நபர்… போன்றன). நாம் ஏன் Panopticon செயலியை இதற்காக உருவாக்க கூடாது? இது ஒரு திட்ட முகாமைத்துவ மென்பொருள், இதன் சாதாரண வடிவம் JIRA ஆகும்.
  18. பயனர் வரையறுக்கும் கணிப்பீட்டு சூத்திரங்கள்: பணி ஒன்று நிறைவேற்றப்பட முடியுமா என்பதைத் தீர்மானிக்க “இது நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்ற சூழ்நிலையை பயன்படுத்தும் முறைமை”. இதனை Microsoft Excel வசதியைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும். ஒழுங்காகச் செய்தால், இது முறைமைக்குள் நிரலாக்க மொழிறை உட்புகுத்தும் பணிக்கு சமமானது. இது SQL உட்புகுத்தல் மூலம் மேற்கொள்ளப்படலாம். SPCஇல் SQL இனைப் பயன்படுத்தும் எவராவது உள்ளனரா?
  19. ஜீவனியைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் பொதியிடல் பொருட்களின் அளவுகளைக் கண்டறிதல். ஆம், இங்கு உற்பத்தி ஆதரவு மற்றும் ஏற்பாட்டியல் என்பவற்றுக்கான கோரிக்கை ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.

இந்த கோரிக்கைகளை தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட எவரும் நோக்கியிருக்கமாட்டார்கள் என்பதே இதனைப் பார்த்தவுடன் எமக்கு தோன்றிய முதல் எண்ணமாக இருந்தது. மாறாக, புதிய மென்பொருளில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு திணைக்களத்திடமும் கோரப்பட்டிருக்கும். இதனை SPC பணியாளர்கள் சிந்தனை, கருத்திற் கொள்ளல் இல்லாமல் மற்றும் தொழில்நுட்ப யதார்த்தங்களைப் பற்றிய புரிதல் இன்றி மேற்கொண்டிருப்பர்.

இந்த ஊகம் இரண்டு விடயங்களால் உறுதியாகின்றது: 1. ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படல்: பல திணைக்களங்கள் ஒரே வகையான பணியினை மேற்கொள்வதால் அவை ஒரே வகையான செயற்பாடுகளைக் கோரியுள்ளன. ஒரு தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் இதனை நோக்கியிருந்தால், அநேகமான செயற்பாகளை (உதாரணமாக, டிஜிட்டல் கையொப்பம்) பிரித்தெடுத்து ஒரு பொதுவான இயங்குதள அம்சங்களில் இணைத்திருக்கலாம். 2. பரப்பு எல்லை: இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பாரிய பொருட்பட்டியல் முகாமைத்துவம், நிதி மற்றும் கணக்காய்வு விவரக் குறிப்புகளை நோக்கும் வேளை, பகுத்தறிவுள்ள எந்த ஒரு மென் பொருள் பொறியியலாளரும் இதனை வடிவமைக்க அல்லது உருவாக்க இணங்க மாட்டார். உலகின் மிகப் பாரிய ERP மென்பொருட்களாலேயே மேற்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக அமைந்துள்ளது.

அனைத்தையும் மேற்கொள்ளும் பணியை உங்களால் செய்ய முடியலாம், ஆனால் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளும் மென்பொருளை உருவாக்குவது முடியாத விடயமாகும். GMBH கொண்டுள்ள AssetPanda மற்றும் RIB மென்பொருட்களில் மற்றும் Lyft கொண்டுள்ள மென்பொருளில் கூட இல்லாத வசதிகள் இங்கு கோரப்பட்டுள்ளன. இக்கோரிக்கையை நிறைவேற்ற வங்கி மென்பொருள், Adobe Document Cloud, Auditboard, Atlassian JIRA மற்றும் Oracle இன் நேவளுரவைந போன்ற பல பாரிய மென்பொருட்கள் ஒன்றிணைக்கப்பட்டு மேற்கொள்ளும் பணியாக இக்கோரிக்கை காணப்படுகின்றது. அந்த நேரத்தில் ஒரு பகுப்பாய்வாளர் இவற்றை நோக்கியிருந்தால் இந்த முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டியிருப்பார்.

எவ்வாறாயினும், தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட ஒருவர் இதனை நோக்கியிருப்பார் என்பது தெளிவு – அல்லது விரைவாக இதற்கு அனுமதி வழங்கி இருப்பார். இந்த மென்பொருள் இணையத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாக அமைந்திருந்தது. SPC இல் உள்ள கணணிகளுக்கு புதிதாக ஒன்றையும் பொருத்த வேண்டிய தேவை இல்லாமல் 02 – 05 செக்கன்களுக்குள் செயற்படும் நிலையில் இந்த மென்பொருள் அமைய வேண்டும் என்பதும் கோரிக்கையாக அமைந்திருந்தது.

Screen Navigation: screen-to-screen < 3 seconds

Screen Refresh < 2 seconds

Screen list box, combo box < 2 seconds

Screen grid – 25 rows, 10 columns < 3 seconds

Report preview – (all reports) – < 60 seconds in most instances.

Simple search – single table, e5 fields, 3 conditions  < 3 seconds for 100,000 rows

Complex search –a multiple joined table (5), 10 fields, 3 conditions < 5 seconds for 100,000 rows

Server side validations / computations < 2 milliseconds

Client side validations / computations < 1 millisecond

Loading pages < 3 seconds

Saving a record < 5 seconds

Batch processing per 100 records < 120 seconds

Login, authentication, and verification < 5 seconds

தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் நோக்கும் வேளை இவை இன்னும் கண்டுபிடிக்கப்படாத முறைமை ஒன்றில் உள்ளனவாகக் காணப்படுகின்றது. இவ்வாறான இயக்க நேரங்களை அடைவதற்கு நாம் கால இயந்திரத்தில் பயணித்து அந்த தொழில்நுட்பங்களை நிகழ்காலத்துக்கு கொண்டுவர வேண்டும். The sub-2 ms server-side validation அளவு தொடர்ச்சியான தொடர்செயற்பாடாக்க நிலைக்கான Apache Spark கைநூலில் இருந்து பெறப்பட்டதாகவே தோன்றுகின்றது [2].

எனினும் இந்த விடயங்கள் கைநூல்களுக்கானவை. இதன் நடைமுறைச் சாத்தியம் பின்வருமாறு: இது இணையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மென்பொருளாகும். கம்பி இணைப்பில் இலங்கையின் சராசரி புரோட்பான் லேடன்சி வேகம் ~ 25 ms என Speedtest.net குறிப்பிடுகின்றது. இந்த மென்பொருள் இயங்க குறிப்பிடப்பட்ட வேகத்தை ஒரு போதும் அடைய முடியாது. இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் தேடல்களுக்கான பதிலை வழங்க கூகுள் சேர்வர்கள் கூட சில நேரம் தாமதமாகின்றன.

இது ஏன் இவ்வாறு வழங்கப்பட்டது?

நாம் இதனை நீட்டிப் பார்க்கின்றோம். எனினும் நியாயமான சில அனுமானங்கள் பின்வருமாறு: அ) இது முழுமையான முட்டாள்தனமாகும். இது மென்பொருள் நடைமுறை அனுபவம் அற்ற ஒருவரால் கைநூலொன்றில் கொள்கை ரீதியான நிலையில் எழுதப்பட்ட விடயங்களை பிரதி செய்து எழுதப்பட்டதாக இருக்கலாம் அல்லது, ஆ) அல்லது SPC கூகுளை விட விரைவான முறைமை ஒன்றைக் கோரி இருக்கலாம், அல்லது இ) SPC அல்லது அதன் வழங்குனர் பௌதீகவியல் விதி ஒன்றை தகர்த்திருக்கலாம் அல்லது ஈ) இதனையொத்த முறைமை ஒன்று எங்காவது இருந்திருக்கலாம் அல்லது ஒருவர் மாத்திரம் தெரிவு செய்யப்பட இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

துரித கணிப்பீடுகளும் துரித கேள்விகளும்

இவ்விடத்திலேயே விடயங்கள் சுவாரசியமடைகின்றன.

கோப் குழுவின் விசாரணையில் இந்த மென்பொருள் முன்னெடுப்பு தொடர்பில் வெளிவந்த தொகை அண்ணளவாக 19.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமனானதாகும்.

எவ்வாறாயினும் தற்போது பல பிரதான மென்பொருள் கம்பனிகளின் இயக்க பெறுமதியை குறிப்பிடுகின்றோம். நாம் மேலே குறிப்பிட்டதைப் போன்று, அனைத்தையும் மேற்கொள்ளும் கீழ்த்தரமான வேலையை செய்யலாம், எனினும், அதனை சிறப்பாக செய்ய மென்பொருள் இயக்கத்துக்கான செலவு AssetPanda (கணிக்கப்பட்ட வருமானம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்), GMBH இன் RIB மென்பொருள் (கணிக்கப்பட்ட வருமானம் 304 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அத்துடன் Lyft (கணிக்கப்பட்ட வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) போன்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதே போல் 4Park, Adobe Document Cloud, Auditboard, Oracle Netsuite, Canva, Microsoft Word (குறைந்தது Notepad) போன்ற செயலிகளின் செயற்பாட்டையும் உள்ளடக்க வேண்டும். இவ்வனைத்தையும் ஒரு மென்பொருள் செய்யுமாக இருந்தால் அது மிகவும் இலாபகரமானதாக அமையும். ஒரு இலங்கைக் கம்பனியினால் இவ்வனைத்து மென்பொருள் இயக்கங்களையும் ஆரம்பத்தில் இருந்தே செய்ய முடியுமாக இருந்தால் அது நிபுணத்துவத்தின் உச்சமாக இருக்கும். அவ்வாறானதொரு கம்பனியினால் உலகத் தரம் வாய்ந்த மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்கனவே வெளியாகிக் கொண்டிருக்கும். பேஸ்புக் போன்ற நிறுவனங்களை எல்லாம் விஞ்சியதாக அது காணப்படும்.

உண்மையில் ERP மென்பொருட்களுக்கான செலவை அவை செயலிழந்தாலன்றி கணிப்பீடு செய்ய முடியாது:

  1. Waste Management என்ற கம்பனி தனது செயற்பாட்டுக்கு SAP மென்பொருளை அறிமுகப்படுத்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டும் மென்பொருள் செயற்பாடு தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அக்கம்பனி 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்ததுடன் மென்பொருள் அறிமுகம் வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் கிடைக்கவிருந்த நன்மைகளையும் இழந்தது.
  2. அமெரிக்காவின் நான்காவது பெரிய மருந்துப்பொருள் விநியோகத்தரான FoxMeyer Drugs கம்பனி ஒரு காலத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி மிக்க கம்பனியாக இருந்தது. இக்கம்பனி SAP (R/3) மென்பொருளை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமுல்படுத்த Arthur Anderson Consulting என்ற ஆலோசனை நிறுவனத்தை அமர்த்தியது. இந்த அமுல்படுத்தல் மோசமானதாக அமைந்ததுடன் FoxMeyer வங்குரோத்து நிலையை அடைந்தது.
  3. 1998 தொடக்கம் 2005 வரையான காலப்பகுதியில் அமெரிக்க கடற்படை நான்கு தோல்விகரமான ERP முறைமை உருவாக்க முயற்சிகளில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விரயம் செய்தது.
  4. Lidl என்ற ஜேர்மனிய சில்லறை வர்த்தக நிறுவனம் 7 ஆண்டுகளில் 580 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலவிட்டு அம்முயற்சியில் தோல்வியுற்று இறுதியில் பழைய பொருட்பட்டியல் முகாமைத்துவ முறைமைக்கே திரும்பியது.
  5. Nike நிறுவனம் தோல்வியடைந்த ERP முறைமை ஒன்றில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்தது,

எனவே, ERP என்பது பாரியதொரு வியாபாரமாகும். மேலுள்ள தொகைகளை நோக்கும் வேளை 19.5 மில்லியன் டொலர்கள் என்பது மலிவான விலையாகும். எவ்வாறாயினும், SPC என்பது நாம் அறிந்த தோல்வியொன்றாக அமைகின்றது: இந்த 644 மில்லியன் ரூபாய் நட்டம் தற்போது e-Wis நிறுவனத்தினால் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது.

அவர்கள் இவ்விடயங்களை இன்னும் செலவு குறைந்த விதத்தில் செய்யலாம் என அறிந்துள்ளதாகவும் தெரிகின்றது: Loons Lab நிறுவனத்துக்கு ஏற்கனவே காணப்படும் 644 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான முறைமைக்கு பதிலாக புதிய முறைமையை கொண்டு வர 100 மில்லியன் ரூபாய்கள் கேள்விப்பத்திரத்தை அனுமதித்த விடயத்தை நினைவூட்டிப் பாருங்கள்.

தற்போது எமக்கு மூன்று முக்கிய கேள்விகள் எழுகின்றன:

  1. இந்த முன்மொழிவு கோரல் ஆவணத்தை (RFP) வடிவமைத்தது யார்? குறிப்பிட்ட சில நெருக்கடி நிலை குறிகாட்டிகளை அரசாங்கம் அறிந்திருந்தது – உயரும் கடன் சுமை, அரச வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றின் பொதுவான வீழ்ச்சி, மற்றும் பொருளாதாரம் தொடர்பான எமது கட்டுரைத் தொடரில் குறிப்பிடப்பட்ட விடயங்கள். SPC அடிப்படை செயற்பாடு என்ன அன்பதை அறிந்த ஒருவரும் அங்கு இருக்கவில்லையா? (அது மருந்துப் பொருட்கள் கையாளள் அன்றி வாகனத் தரிப்பு வியாபாரம் அல்ல.
  2. இந்த RFP மக்களை சென்றடையும் முன்னர் அதனை சோதனை செய்தது யார்? தீவிர தொழில்நுட்ப கணக்காய்வு மேற்கொள்ப்படவில்லையா? ICTA அமைப்பு (இந்த பணியை மேற்கொள்ள வேண்டிய அமைப்பு) தலையிடவில்லையா அல்லது திறமையற்றதாக இருந்ததா? SPC அமைப்பின் முந்தைய ERP மென்பொருள் தோல்விகளை கருத்திற்கொண்டு அரச மட்ட கண்காணிப்பு மட்டத்தில் அமைந்த இவ்வாறான மென்பொருள் ஒன்றுக்கான கேள்விப்பத்திரத்தை கையாள்வதற்கு முன்னர் சிறிது முன்னெச்சரிக்கையுடன் செயற்படவல்ல ஒருவரும் அங்கு காணப்படவில்லையா?
  3. இந்த 7 பில்லியன் தொகையை வழங்கியது யார்? பல பில்லியன் டொலர்கள் பெறுமதி கொண்ட மென்பொருட் கம்பனிகளுக்கே சவால்மிக்கதாக அமையவல்ல இந்த மென்பொருளை தயாரிக்க தைரியமாக முன்வந்த மென்பொருட் கம்பனி எது? இந்த மென்பொருள் இலகுவில் செயலிழந்து விடும் என அறிவுள்ள எந்தவொரு மென்பொருள் பொறியியலாரும் அறிந்து கொள்வார். இது செயலிழந்து விடும் என அறிந்து கொண்டே ஒருவர் இதனை தயாரிக்க முன்வந்திருப்பார் என்றே எமக்கு புரிகின்றது.

முட்டாள்தனமா அல்லது தீய நோக்கமா?

The Court of Foolishness of Gerard de Lairesse. The accused, pursued by Hatred, is led by Calumny, Envy and Perfidy before a judge with donkey ears, surrounded by Ignorance and Suspicion. From WikiMedia Commons.

எமது Watchdog நிறுவனத்தில் நாம் பயன்படுத்தும் உளவியல் கருவிகளுள் ஒன்றாக Hanlon இன் சவரக்கத்தி என்ற கருவி பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு விடயம் போதிய அளவில் முட்டாள் தனம் என விளக்கப்படும் வேளை அதனை தீய நோக்கம் எனக் கருத வேண்டாம்.

நாம் வாழும் தகவல்கள் குறைந்த சூழல் போன்ற சூழல்களில் செயற்படுத்த சிறந்ததொரு கருவியாக இது அமைகின்றது.

எவ்வாறாயினும், இது முட்டாள்தனம் எனத் தீர்மானிப்பதாயின், இங்கு மூன்று தரப்புகள் முட்டாள்களாக இருக்க வேண்டும்: 1) பால்மாவில் இருந்து வாகன நிறுத்துமிடம், வர்த்தக இலச்சினைகள் வரை அனைத்தையும் கண்டறியும் மென்பொருள் ஒன்றைக் கோரியமைக்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம். 2) ICTA இதற்கு அனுமதி வழங்கியமைக்காக 3) இதற்கு விலைமனு வழங்கிய மென்பொருள் வர்த்தகர்கள். இலாபமீட்டும் நோக்கம் கொண்ட அக்கம்பனிகள் அதனை ஒரு தடவை வாசித்த பின்னரே இது எந்த அளவு மோசமானது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்குள்ள மாற்று எடுகோள் இது தீய நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்பதாகும். வேண்டுமென்றே உருவாக்கப்படவே முடியாத மென்பொருளை அரைகுறையாக உருவாக்கி அதனை செயலிழக்க வைத்தல்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் எமது வார்த்தைகள் மாத்திரமே இறுதியானது அல்ல. தரவுகளுடன் பணிபுரிதல் மற்றும் மென்பொருட்களை கட்டியெழுப்பல் தொடர்பில் எம்மால் முடிந்த விடயங்களையே நாம் அறிந்து கொண்டுள்ளோம், நாம் அனைத்தும் அறிந்தவர்கள் அல்ல. அந்த வகையில் இதன் தொழில்நுட்ப தேவைகளை எமது கருத்துக்களுடன் நீங்களும் வாசித்தறிய வேண்டும் என உங்களை அழைக்கின்றோம். மேலும், நீங்களே தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள். எமது Google Sheet இதோ:

https://docs.google.com/spreadsheets/d/1Bt9cM_jorJsklOKrhkYbE6-1nUwATPIwqU_u-xyZGI0/edit?usp=drivesdk

அடிக்குறிப்புகள்

[1] வெளிப்படுத்தல் : எமது நுடiஒசை காரணமாக நாமும் அழைக்கப்பட்டோம். எனினும் எமது தொழில்நுட்ப அணியில் மூன்றில் இரண்டு பங்கினர் சர்வதேச புலனாய்வு வேலைத்திட்டம் ஒன்றுக்காக நேபாளத்தில் தங்கியிருந்ததால், இதில் பங்குபற்ற முடியவில்லை.

[2] புள்ளிவிபரங்கள் மிகவும் பரிச்சயமானவை. ஏனெனில் LIRNEasia நிறுவனத்தில் கல்வி ஆய்வு ஒன்றுக்காக – மில்லியன் மற்றும் பில்லியன் பதிவுகள் - பாரிய தரவுப் பணிக்கு Spark இனைப் பயன்படுத்தியுள்ளேன்.

7-Billion Rupee Software: The Monstrous Idiocy of the State Pharmaceutical Corporation