Analysis
மாற்றமடையும் இலங்கையின் தரைத்தோற்றம் : ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்துவதற்கான அழைப்பு
Nov 26, 2024

2021 ஆம் ஆண்டில், கண்காணிப்புக்கான ஒரு வழிகாட்டலை நாங்கள் வகுத்தோம். எமது அமைப்புக்கு வெளியே இதைப் பற்றி பொது வெளியில் பேசுவது இதுவே முதல் தடவையாகும். எப்படியாவது 2017 ஆம் ஆண்டு தொடக்கம் முழு நாட்டிற்கும் செயற்கைக்கோள் படங்களைப் பெறுவதே புரஜெக்ட் Sauron என்ற எமது திட்டத்தின் உறுதியான நோக்கமாக இருந்தது. 

அந்த செயற்கைக்கோள் படங்களைப் பெறுவதும், அவற்றை நாம் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றுவதும் சவாலாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, செயற்கைக்கோள் படங்களை கூகுள் வரைபடங்களை ஸ்கிரீன்ஷொட் எடுப்பது போல் எளிதானது அல்ல - மேகங்கள் மற்றும் அவற்றின் நிழல்களை அகற்றுவது முதல் ஒவ்வொரு படமும் சரியான இடைவெளியில் போதுமான அளவு படங்களாக பெறுவது வரை பல விவரங்களை ஒரு வழக்கமான நேர இடைவெளி தொகுத்துப் பெறுவது சிரமமிக்கதாகும்.  

இந்த ஆண்டு, எங்கள் நிதியளித்தவர்களுக்கும், ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் சென்டினல்-2 திட்டத்திற்கும் நன்றி. புதிராக இருந்த  அந்தப் பகுதியை எங்களால் உண்மையில் பூரணப்படுத்த முடிந்தது. 2017 முதல் 2024 வரையிலான இலங்கையின் வரைபடங்களை அவற்றின் அனைத்து வடிவங்களிலும் பொதுவெளியில் வெளியிடுகிறோம்: https://github.com/team-watchdog/satellite2024

அவை நாம் பெற்றுக்கொண்டதில் உள்ள மூலத் தரவைக் காட்டிலும் குறைவான தெளிவுத்திறன் கொண்டவை. எங்களைப் பொறுத்தவரை, ஒரு வருடத்தின் படங்கள் 6 ஜிகாபைட்டுகளுக்கு மேல் காணப்படுகின்றது. இவை உயர் தெளிவுத்திறன் கொண்ட JPEGகள், அவற்றை உங்கள் சாதனங்களில் பார்ப்பதற்கு ஏதுவாக செறிவு குறைக்கப்பட்டுள்ளது.   

மனிதர்களால் நிலத்தோற்றத்தை எந்தளவு மாற்ற முடியும் என நீங்கள் எப்போதாவது கேள்வி எழுப்பியிருந்தால், இந்த செயற்கைக்கோள் படங்கள் அதை உங்களுக்கு நிரூபிக்கும். வெவ்வேறு நிலப்பரப்புகளில் சான்றுகள் தெளிவாக உள்ளன. உதாரணமாக மன்னாரில் ஒவ்வொரு வருடமும் கரையோரம் மெல்ல மெல்ல அழிந்து போவதைக் காணலாம். மத்திய மலைநாடுகளில், நெல் வயல்கள் மேலும் மேல்நோக்கியும் வெளிநோக்கியும் விரிவடைவதால் தாவர வளர்ச்சியில் மாற்றங்களைக் காணலாம். 

செயற்கைக்கோள் படங்களின் சக்தி 

எமது நாட்டின் செயற்கைக்கோள் படங்களில் பல மாதங்கள் ஆய்வு செய்ததன் பின்னர், குறைந்தபட்சம் ஐந்து அழுத்தமான விடயங்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது: இவை வெறுமனே சுருக்க தரவுகள் அல்ல. அவை நம் நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் மாற்றம், மோதல்கள் மற்றும் நம்பிக்கையின் கதைகளாகும். 

முதல் கதை சுற்றுலா மற்றும் அதன் செலவுகள் பற்றியது. வருடா வருடம், விடுதிகள் மற்றும் சுற்றுலா உட்கட்டமைப்புகள் எமது கடற்கரைகளை விழுங்குவதை நான் பார்த்து வருகிறேன். ஒரு காலத்தில் அமைதியாக இருந்த மீனவ கிராமமான மிரிஸ்ஸாவில், விருந்தினர் மாளிகைகள் மற்றும் உணவகங்கள் நீர்நிலைகள் வரை நீண்டு செல்வதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. செயற்கைக்கோள் பொய் சொல்லவில்லை - பெரும்பாலும் உள்ளூர் மீன்பிடி சமூகங்களின் இழப்பில் நமது வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத் தொழில் நமது கடற்கரைகளை மறுவடிவமைக்கிறது, 

ஆனால் இது எமது அழகான கடற்கரைகளைப் பற்றியது மாத்திரமல்ல. ஒரு தேசமாக நாம் எதிர்கொள்ளும் ஒரு அப்பட்டமான சவாலை இந்தப் படங்கள் வெளிப்படுத்துகின்றன: குறுகிய கால சுற்றுலா டொலர்கள் வேண்டுமா அல்லது நீண்ட கால சுற்றுச்சூழல் நிலைபேறானதன்மை வேண்டுமா? பதில் எளிதானது அல்ல, ஆனால் நமது தெரிவின் விளைவுகள் மண்ணில்  பிரதிபலிக்கின்றன - விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் படங்களில் அதனைப் பார்க்கிறோம்.

இரண்டாவது விவசாயத்தின் தாக்கம். எங்கள் விவசாய மையப்பகுதிகள் கவலையான மற்றும் சில நேரங்களில் விரக்தியின் கதையைச் சொல்கிறது. பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தின் அரிசிக் கிண்ணங்களாக கருதப்படும் இடங்களில், மாற்றங்களை நான் அவதானித்துள்ளேன் - காலநிலை மாற்றம், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் சில சமயங்களில் நில அபகரிப்புக்கள் சாட்சிகளாகப் பதிவாகியுள்ளன, நமது உணவுப் பாதுகாப்பு எவ்வாறு புதிய உண்மைகளுக்குத் தகவமைத்துக் கொள்கிறது - அல்லது மாற்றியமைக்கத் தவறுகிறது - என்பதைக் காட்டுகிறது.

மிகவும் கவலைக்குரியது பழுப்பு நிற திட்டுகள் - கைவிடப்பட்ட வயல்களில் பயிர்ச் செய்கைத் தோல்விகள் மற்றும் கிராமத்திலிருந்து நகர்ப்புற இடம்பெயர்வு பற்றி பேசுகிறது. நமது மாறிவரும் விவசாய நிலப்பரப்பு நமது கிராமப்புற சமூகங்களின் ஆரோக்கியத்திற்கும் நமது உணவுப் பாதுகாப்பிற்கும் ஒரு அளவுகோலாகக் காணப்படுகின்றது.

மூன்றாவது அபிவிருத்தி குறிப்பாக வாக்குறுதிக்கும் முன்னேற்றத்திற்கும் இடையிலான இடைவெளிகள். புதிய நெடுஞ்சாலைகள், கைத்தொழில் வலயங்கள், துறைமுக நகரங்கள் - பிரமாண்டமான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு வாக்குறுதி அளிக்க நமது அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். செயற்கைக்கோள் படங்கள் இந்த வாக்குறுதிகளை வரைபடத்திலிருந்து உண்மை வரை கண்காணிக்க உதவுகிறது. செயற்கைக்கோள் பதிவு நாங்கள் வாக்குறுதியளித்ததைப் பெறுகிறோமா? நேரமாகுமா? மற்றும் என்ன செலவில்? என எம்மைக் கேட்க வைக்கிறது. 

நான்காவது நமது நகரங்களை எப்படி உருவாக்குகிறோம் என்பது பற்றியது. கறுவாத் தோட்டத்தின் பசுமையான நிழல்கள், கொம்பனி வீதியின் கொன்கிரீட் விரிவாக்கங்களுக்கு முற்றிலும் எதிராக நிற்கின்றன. புறக்கணிக்க முடியாத நகர்ப்புற சமத்துவமின்மையின் காட்சிப் பிரதிநிதித்துவம் இதுவாகும்.

ஆனால் இன்னும் இது போன்ற நிறைய கதைகள் உள்ளன. நீங்கள் பல ஆண்டுகளாக மாற்றங்களைப் பார்க்கும்போது, எங்கள் நகரங்கள் எப்படி, எங்கு விரிவடைகின்றன - என்ன சவால்கள் வருகின்றன என்பதை நாம் காணலாம். எனது தனிப்பட்ட கவலை எங்கள் நகரங்களுக்குள் பசுமையான இடங்கள் இல்லாமையாகும், ஆனால் சவால்களை மக்கள் எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதைப் பற்றி அதிகமாகக் காணலாம். இது எங்கள் அபிவிருத்தித் தெரிவுகளில் காலவோட்டத்தைப் பார்ப்பது போன்றது – அது நல்லதாகவும் அமையலாம் அல்லது மோசமானதாகவும் அமையலாம்

இறுதியாக, நமது காடுகளுக்கு என்ன நடக்கிறது. வில்பத்து தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வலயங்களில், விவசாயம் மற்றும் குடியேற்றத்தின் வடிவங்களால் காடுகள் மெதுவாக அழிந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இங்கே செயற்கைக்கோள் படங்கள் பொறுப்புக்கூறலுக்கான சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது. இந்த மாற்றங்களை நில பயன்பாட்டுக் கொள்கைகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிகளுடன் தொடர்புபடுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் விதிமுறைகளின் மீறல்களை நாம் சுட்டிக்காட்டலாம்.

தெளிவுபடுத்துதற்கான அழைப்பு

பொருளாதார வளர்ச்சி, அரசியல் தெரிவுகள் மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்களுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது. இந்தச் சவால்களை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள உதவ, ஊடகவியலாளர்கள் தங்கள் முறைமைகளை மேம்படுத்த வேண்டும், என்ன நடக்கிறது என்பதைக் காட்டுவதற்குப் பதிலாக, அதை வார்த்தைகளில் விவரிக்காமல், அதிகமான காட்சிகளைப் பயன்படுத்த வேண்டும்.

இருப்பினும், செயற்கைக்கோள் படங்கள் மட்டும் போதாது. சில நேரங்களில், மேலே இருந்து காடழிப்பு போல் தோன்றுவது தரையில் வேறு காரணங்களைக் கொண்டிருக்கலாம். ஊடகவியலாளர்கள் இன்னும் உண்மைகளை கவனமாகச் சரிபார்த்து, தாங்கள் பார்ப்பதைச் சரிபார்க்க வேண்டும். பெரிய மாற்றங்களைக் கண்டறிவதற்கு செயற்கைக்கோள் படங்கள் உதவியாக இருக்கும், ஆனால் முழுக் கதையையும் சொல்ல தரையில் விசாரணை தேவை. இலங்கையில் சுற்றுச்சூழல் அறிக்கையிடலை உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்த, ஊடகவியலாளர்கள் விவரங்களை இணைக்க வேண்டும்: அரசாங்க கொள்கைகள் நிஜ வாழ்க்கை நடைமுறைகளை எவ்வாறு பாதிக்கின்றன, பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் பாதுகாப்போடு சமநிலைப்படுத்துகின்றன மற்றும் உள்ளூர் நடவடிக்கைகளை அவற்றின் உலகளாவிய விளைவுகளுடன் இணைக்கின்றன.

இந்த அணுகுமுறை பசுமை அகல்தல் I மற்றும் II ஆகிய இரண்டு அறிக்கைகளுடன் தொடங்கியுள்ளது, இது இந்த சிக்கல்களை விரிவாக கல்துரையாடுகின்றது, ஆனால் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன.

என்ன மாதிரியான கதைகளை நாம் சொல்ல முடியும்?

எங்கள் காடுகள்: முற்றுகை மற்றும் மெதுவான மரணத்தின் கதை

பல்லுயிர் பெருக்கத்தின் நமது மணிமகுடமான சிங்கராஜா முற்றுகையிடப்பட்டுள்ளது. வருடாந்தம் வீதிகள் அதன் எல்லைகளை நெருங்கி வருவதையும், ஹோட்டல்கள் முளைப்பதையும், காடுகளின் விளிம்பு மெதுவாக விலகுவதையும் நாம் கேள்விப்படுகிறோம். இது சுற்றுச்சூழல் சட்டங்களில் உள்ள ஓட்டைகள், 'அபிவிருத்தியின்' சக்கரங்களை ஊறவைத்தல் மற்றும் 30,000 வருடாந்த பார்வையாளர்களின் வருமானத்தின் கீழ் அமைந்த ஒரு நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை பற்றிய கதை.  

ஆனால் சிங்கராஜ அதன் அவலநிலையில் தனியாக இல்லை. கன்னெலிய-தெடியகல-நாகியதெனிய (KDN) வளாகம் மற்றும் நக்கிள்ஸ் பாதுகாப்பு காடு ஆகியவை மெதுவான அழிவின் இதேபோன்ற கதையைச் சொல்கின்றன. நேரம் தவறிய புகைப்படங்கள் எடுத்தல் மூலம், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் துண்டு துண்டாக சிதைவடைவதை நான் கண்டறிந்துள்ளேன், வீதிகள் ஒரு காலத்தில் பழமையான பகுதிகள் வழியாக வெட்டப்பட்டன. தற்போது விவசாய நிலங்கள் காட்டின் எல்லைக்குள் செல்வதை வரைபடமாக்கியுள்ளேன். 

நாம் இங்கே ஆழமாக ஆராய வேண்டும். இந்த காடுகளின் சுரண்டலால் உண்மையில் யாருக்கு இலாபம்? இந்தப் பகுதிகளை மீட்டெடுப்பதாகக் கூறும் பொது-தனியார் ஒத்துழைப்பு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? செயற்கைக்கோள் தரவுகளை இணைப்பதன் மூலம் - ஒருவேளை ட்ரோன் படங்கள் கூட - தரையில் அறிக்கையிடல், சுற்றுச்சூழல் வாக்குறுதிகள் மற்றும் விண்வெளியில் இருந்து தெரியும் யதார்த்தபூர்வமான உண்மை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியை நாம் வெளிப்படுத்தலாம். 

பசுமைப்புரட்சியின் மறைமுக பாதிப்பு 

கிளிநொச்சி 2018 இலிருந்து 2024 வரை வியத்தகு முறையில் மாறி, விளைநிலமாக மாறியுள்ளது. இந்த முன்னேற்றம் மனிதனின் படைப்பாற்றல் மற்றும் உறுதியை எடுத்துக்காட்டினாலும், மறைமுக பாதிப்புக்கள் பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது.

செயற்கைக்கோள் படங்கள் அதிகரித்த உணவு உற்பத்தியைக் காட்டுகின்றன, ஆனால் அவை இயற்கை தாவரங்களின் இழப்பு, நீர் ஆதாரங்களில் மாற்றங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளாக இருந்த பகுதிகளுக்கு குடியிருப்புகள் விரிவாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இது ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது: உணவு உற்பத்தியில் விரைவான ஆதாயங்களுக்காக நாம் நீண்டகால சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறோமா? 

இந்தக் கதையின் மனிதாபிமானப் பக்கமும் இருக்கிறது. படங்கள் மாறிவரும் நிலத்தைக் காட்டினாலும், விவசாயிகளின் வாழ்வில் ஏற்படும் பாதிப்பைக் காட்டவில்லை. இந்த விவசாய வளர்ச்சியால் அவர்கள் உண்மையிலேயே பயனடைகிறார்களா அல்லது அதே பழைய சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்கிறார்களா? இந்த மாற்றத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது நிலத்தையும் அதை வடிவமைக்கும் மக்களையும் பார்ப்பதாகும்.

ஈரநில நெருக்கடி - அனவிலுந்தவ எச்சரிக்கை 

அனவிலுந்தவ ஈரநிலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, மனித செயற்பாடுகள் எவ்வாறு நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஒரு காலத்தில் பசுமையாகவும், நீர் நிரம்பியதாகவும் இருந்த இந்தப் பகுதி வறண்டு, பாழடைந்து விட்டது. முக்கிய காரணம்? ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் விவசாயம், ஈரமான மற்றும் வறண்ட பருவங்களின் இயற்கை சுழற்சியை சீர்குலைத்துள்ளது,.

இந்த நிலைமை சுற்றுச்சூழலுக்கு ஒரு இழப்பை விடவும் அதிக பாதிப்பாகும் - இது முழு நாட்டிற்கும் ஒரு எச்சரிக்கை. உள்ளூர் நேர்காணல்கள் மற்றும் அறிக்கைகளுடன் செயற்கைக்கோள் படங்களை இணைப்பதன் மூலம், இந்த கதையை சக்தி வாய்ந்ததாக சொல்ல முடியும். நேரம் தவறிய வீடியோக்கள், காலப்போக்கில் ஈரநிலத்தின் வீழ்ச்சியைக் காட்டக்கூடும், அதே நேரத்தில் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களுடனான உரையாடல்கள் நுண்ணறிவை வழங்கக்கூடும். ஒன்றாக, விவசாயம் மற்றும் சதுப்பு நிலங்கள் அருகருகே உயிர்வாழ உதவும் விவசாய முறைகளை ஆராயலாம், தீர்வுகள் மற்றும் கடுமையான யதார்த்தத்தை முன்வைக்கலாம்.

நகர்ப்புற வெப்ப தீவுகள்: எங்கள் நகரங்களின் நிலைமை

எங்கள் நகரங்கள் விரிவடையும் போது, அவை உண்மையில் வெப்பமடைகின்றன. வெப்ப செயற்கைக்கோள் படங்கள், கொழும்பு போன்ற பகுதிகள் 'நகர்ப்புற வெப்ப தீவுகளை' உருவாக்குகின்றன என்பதைக் காட்டுகின்றன, அங்கு வெப்பநிலை சுற்றியுள்ள பகுதிகளை விட கணிசமாக அதிகமாக உள்ளது. இது அசௌகரியமானது மாத்திரமல்ல - இது ஒரு பொது சுகாதார கவலையாக மாறி வருகிறது.

காலப்போக்கில் வெப்பநிலை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டும் முக்கிய நகரங்களின் ஊடாடும் வெப்ப வரைபடங்களை உருவாக்க இந்த செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தலாம். The Unwalkable City என்று அழைக்கப்படும் முந்தைய திட்டத்தில், வெளிப்படும் நடைபாதைகள் எவ்வாறு 56 டிகிரி செல்சியஸை எட்டும் என்பதை நாங்கள் காண்பித்தோம், எங்கள் சொந்த நில வெப்பநிலை அளவீடுகளை ஆய்வுகளுடன் இணைத்தோம். பசுமையான இடங்களின் இழப்பு மற்றும் கட்டுமான முறைகள் பற்றிய தரவுகளைச் சேர்ப்பதன் மூலம், சரிபார்க்கப்படாத நகர்ப்புற வளர்ச்சியின் தாக்கத்தை நாம் வெளிப்படுத்தலாம்.

ஆனால் நாம் பிரச்சனையை மட்டும் சுட்டிக்காட்டக்கூடாது. குளிரூட்டும் தீர்வுகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

கொள்கையிலிருந்து நடைமுறைப்படுத்தலுக்கு

இலங்கையின் சட்டங்களில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் உண்மையில் தரையில் என்ன நடக்கிறது என்பதோடு பொருந்தவில்லை. காகிதத்தில் வலுவான சுற்றுச்சூழல் விதிகள் இருந்தாலும், செயற்கைக்கோள் படங்கள் தொடர்ந்து காடழிப்பு, கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் ஆகியவற்றைக் காட்டுகின்றன.

இந்த இடைவெளியை போக்க நெருக்கமான ஆய்வு தேவை. சுற்றுச்சூழல் முகமைகள் எவ்வாறு பணியாளர்கள் மற்றும் நிதியளிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்-எவ்வளவு தூரம் அவை புறக்கணிக்கப்படுகின்றன? இந்த முடிவுகளில் அரசியல் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் அரசியல் தலையீடுகளின் பதிவுடன் சுற்றுச்சூழல் பாதிப்பைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களை இணைப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த வகையான புலனாய்வு அறிக்கையிடல் உண்மைகளை வெளிப்படுத்தி, உண்மையான மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .