அறிமுகம்
முந்தைய திட்டத்தில், நகரங்கள்: Skylines செயற்பாடு தொடர்பில் கொழும்பு நகரின் மிகவும் விரிவான மாதிரியை உருவாக்கினோம். வீதிகள், மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து முறைகள் போன்றவற்றின் உத்தியோகபூர்வ தரவுகளைப் பயன்படுத்தி அதை முடிந்தவரை யதார்த்தமாக்க முயற்சித்தோம். துல்லியமான தகவல்களைப் பெற பல்கலைக்கழகங்களுடன் கூட நாங்கள் பணியாற்றினோம். கொழும்பு நகரம் உண்மையில் எவ்வளவு நெரிசலும் சிரமமும் மிக்கது என்பதை இந்தத் திட்டம் வெளிப்படுத்தியது.
சர்வதேச நியமங்களின் பிரகாரம் கொழும்பு ஒப்பீட்டளவில் சிறிய நகரமாகும், இது சுமார் 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, ஆனால் அதில் ஏராளமான மக்கள் உள்ளேயும் வெளியேயும் வருகிறார்கள்— தினமும் ஒரு மில்லியன் மக்கள் வந்து செல்வதால் நகரம் பெரிய சிக்கல்களை எதிர்கொள்கிறது: கொழும்பு நகரம் சரியாகத் திட்டமிடப்படவில்லை (அல்லது முட்டாள்களால் திட்டமிடப்பட்டது), அதன் வீதிகள் வாகனப் போக்குவரத்தின் அளவிற்கு மிகவும் குறுகலாக உள்ளன, மேலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு குறைவான இடங்களே உள்ளன. பல ஆண்டுகளாக, அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளமை, வர்த்தக செயற்பாடுகளின் அதிகரிப்பு காரணமாக அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது,
சனத்தொகை அடர்த்திமிக்க நகரமயமாதலை புறநகர்ப் பகுதிகளுக்குள் அல்லது புறநகர்ப் பகுதிகளாகக் கொண்டு செல்வதற்கு, கொழும்பு மேல் நோக்கியும் வெளியேயும் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புறநகர் பகுதிகள் இப்போது முழுக்க முழுக்க நகர்ப்புறங்களாக மாறிவிட்டன, மேலும் நகரம் எஞ்சியிருக்கும் சிறிய பசுமையான பகுதிகளை இழந்து எப்போதும் வெளிப்புறமாக விரிவடைந்து வருகின்றது.
இந்தத் திட்டம் முழு நாட்டையும் சிந்திக்க வைத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பகுதி எவ்வாறு மாறிவிட்டது என்பது பற்றிய தெளிவு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, கடந்த 20 வருடங்களாக கொழும்பில் நான் கண்ட மாற்றங்களை என்னால் விவரிக்க முடியும், மேலும் இந்த ஆக்கத்தினை மொழிபெயர்ப்புச் செய்யும் எனது நண்பரான பைரூஸ் தனது சொந்த ஊரான காத்தான்குடியைப் பற்றி பேசலாம். ஆனால் இந்த அனைத்து மாற்றங்களையும் ஒரே நேரத்தில் இலங்கை முழுவதும் எப்படி பார்க்க முடியும்?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க, ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் சென்டினல் 2 செயற்கைக்கோள்களில் இருந்து செயற்கைக்கோள் படங்களை பெற்றுக்கொண்டோம். இந்த செயற்கைக்கோள்கள் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்டவை அல்ல. - சிறந்தவை விலை உயர்ந்தவை மற்றும் தனிப்பட்டவை என்பதால் - ஆனால் அவை இன்னும் பொது பயன்பாட்டிற்கு மிகவும் நல்லது. இந்தப் படங்களைக் கொண்டு, 2017 முதல் 2024 வரையிலான ஆண்டுகளை உள்ளடக்கிய இலங்கையின் வரைபடங்களை உருவாக்கினோம். [1].
மற்றும் இங்கே நாம் கண்டறிந்தது என்னவென்றால்,
கிளிநொச்சி விவசாய நிலத்தொடர்
2018 இல் நல்லூர், கிளிநொச்சி மற்றும் கண்டாவளைக்கு இடைப்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு காணப்பட்டன.
2024 இல் இவ்வாறு காணப்பட்டன
கிளிநொச்சி விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தும் பிரதேசமாகும். அரசாங்க மதிப்பீடுகளின் படி 2015 ஆம் ஆண்டில், கிளிநொச்சியில் சுமார் 25 வீதமான பிரதேசங்கள் நெல் வயல்களாகவும், சுமார் 13 வீதமான பிரதேசங்கள் வீட்டுத் தோட்டங்களாகவும் சுமார் 24 வீதமான பிரதேசங்கள் காடுகளாகவும் பயன்படுத்தப்பட்டன. [2][3]..தற்போது, நடுப் பகுதியில் காணப்படும் பெரும்பாலான பகுதியளவிலான காடுகள் விவசாய நிலங்களாக மாறிவிட்டதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி, இப்போது விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு பெரிய பகுதி உள்ளது.
இது இப்பகுதியில் உள்ள சில பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை பரவலாக கண்காணிக்கிறது. 2017 ஆம் ஆண்டிலிருந்து, குறைந்தபட்சம், அரசாங்கத்தில் உள்ள விவசாயத் துறையினர் கிளிநொச்சி உட்பட பயன்படுத்தப்படாத விவசாய நிலங்களை மீட்டெடுக்க முயற்சிக்கின்றனர்[4]. பிராந்திய விவசாய மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி மத்திய நிலையம் என்பது ஒரு விடயம் (மிகவும் குறைவான பணியாளர்கள் இருந்தாலும்) மற்றும் இத்துறையில் பணிபுரிபவர்கள், அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்களை அதிகப்படுத்துவது போல் தெரிகிறது. குறைந்த பட்சம் 2017 முதல் நீர்வழிகள், வீதிகள் மற்றும் பெரிய தொழில்துறையை (MAS Active, MAS Vidiyal, KIST போன்றவை) கொண்டு வருவதற்கான திட்டங்கள் வள ஒதுக்கீடு மற்றும் வெற்றியுடன் பல்வேறு மட்டங்களில் இடமபெற்று வருகின்றன.
கிளிநொச்சியின் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான சில முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. 2022 ஆம் ஆண்டில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) புள்ளிவிபரங்கள் கிளிநொச்சியின் 44 வீதமான நிலப்பரப்பு நெற்பயிர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது. [6].
எவ்வாறாயினும், விவசாயத்தில் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், கிளிநொச்சி ஒரு ஏழ்மையான பிரதேசமாகவே உள்ளது, 2022 இல் 18 வீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். கோத்தாபயவின் [6][7] தலைமையில் அரசாங்கம் இரசாயன உரங்களை தடை செய்த போது, அந்த விவசாய நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் கிளிநொச்சியும் ஒன்றாகும். நிலைமையை மேம்படுத்த உதவும் வகையில், 250 மில்லியன் [8] டொலர் குடிநீர் திட்டம் மற்றும் கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டம் போன்ற திட்டங்களில் நகர அபிவிருத்தி அதிகாரசபை முதலீடு செய்துள்ளது. இந்த திட்டங்கள் கிளிநொச்சியின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்துமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது. [9]
இங்கு சுற்றுச்சூழல் சவால்களும் உள்ளன. இலங்கையில் விவசாயம் என்பது பெரும்பாலும் வெட்டுதல் மற்றும் எரித்தல் முறைகளை உள்ளடக்கியது, அங்கு மரங்கள் வெட்டப்பட்டு நிலத்தை சுத்தப்படுத்த எரிக்கப்படுகின்றன. [10] இது எளிமையான, குறைந்த தொழில்நுட்ப விவசாய முறை என்பதால், செங்குத்து வளர்ச்சியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கிடைமட்ட வளர்ச்சியை பயன்படுத்த முனைகிறது. இது காடுகளை இழக்க வழிவகுக்கிறது, வெற்று நிலமாக மாறி குளிர்மையடைந்து தண்ணீரை தக்க வைக்க முடியாமல் போராடுகிறது. கிளிநொச்சி அதன் எல்லைகளில் காடுகளைக் கொண்டிருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் ஏற்கனவே காணலாம் - வீதிகளில் உள்ள நிலம் பழுப்பு நிறமாக மாறுவது மற்றும் பசுமையை மெதுவாக இழப்பது போன்றவை இதற்கு உதாரணமாகும்.
குருநாகல், அனுராதபுரம், வவுனியா
இழப்பைப் பற்றி பேசுகையில், அண்மைய ஆண்டுகளில் நமக்கு நாமே ஏற்படுத்திய தீங்கின் மிகப்பெரிய நிகழ்வுகளாக இரண்டு முக்கிய உதாரணங்கள் உள்ளன.
2018 இல்இந்தபிராந்தியத்தின்மையப்புள்ளிஇதுவாகும்:
2024 ஆம் ஆண்டின் போதான தோற்றம்
ஏற்கனவே வெப்பமான பகுதிகளில் உள்ள காடுகளின் அழிவு, குறைந்த நீர் மற்றும் மக்கள் மற்றும் விலங்குகளின் வாழ்வாதாரம் காடுகளை சார்ந்துள்ளமை இன்னும் பல காரணங்களினால் காடுகள் அழிந்து வருகின்றன. இப்பகுதி நாட்டின் நடுப் பகுதி வறண்ட, தூசி நிறைந்த தரிசு நிலமாக தற்போது மாறி வருகிறது.
2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு பிரச்சனையின் அளவைக் காட்டுகிறது: 2000 முதல் 2020 வரை, குருநாகலில் 9.82 வீதமான காடுகள் அழிவடைந்துள்ளன, மற்றும் அனுராதபுரத்தில் 12.06 வீதமான காடுகள் அழிவடைந்துள்ளன. இயற்கை நிலத்தை ஆக்கிரமித்துள்ள விவசாயம், நகரமயமாக்கம் மற்றும் கட்டிடத் திட்டங்களால் இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளன. புதிய குடியிருப்புகளுக்காக காடுகளை சட்டவிரோதமாக வெட்டுவதும், துப்பரவு செய்வதும் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
இந்த மாற்றத்தை நாம் தெளிவாகக் காணலாம்: செயற்கைக்கோள் படங்களில் பச்சையான பகுதி, இயற்கை தாவரங்களைக் குறிக்கும், இப்போது கட்டுமான வலயங்களாக அல்லது விவசாய வயல்களாக மாறிவிட்டன. சில அடர்ந்த பச்சை வனத் திட்டுகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன.
ஆய்வில் வவுனியாவைக் குறிப்பிடவில்லை, ஆனால் காட்டுப் பகுதியின் தொடர்ச்சியான அழிவு அதைச் சுற்றியுள்ள முழுப் பகுதியையும் பாதிக்கிறது. (இடப் பக்கம் 2018) மற்றும் (வலப் பக்கம் 2024) படங்களில் காட்டப்பட்டுள்ளபடி, மனித செயல்பாடுகள் பரவி வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள சிறிய கிராமங்கள் கூட அதிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தைக் கண்டு வருகின்றன.
ஹம்பாந்தோட்டையின் வளர்ச்சி
ஹம்பாந்தோட்டை கொஞ்சம் பசுமையை மீட்டெடுக்கிறது. மேலே இருந்து பார்க்கும் போது, இன்னும் பசுமையான பகுதிகள் திரும்பியது போல் தெரிகிறது. 2018 இல் அது எப்படி இருந்தது என்பது இங்கே காணலாம்.
இது 2024 இல் எடுக்கப்பட்டது
ஹம்பாந்தோட்டை 2008 முதல் 2019 வரை, குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் தலைமையின் கீழ் தீவிர வளர்ச்சிக்கு உட்பட்டது. இந்த நேரத்தில், அதிகமான கட்டுமானங்கள் நடந்தன, மேலும் பல காடுகள் வெட்டப்பட்டன. அம்பாந்தோட்டையில் கட்டப்பட்ட பகுதிகள் சுமார் 27.66 வீதம் அதிகரித்துள்ளதாகவும், காடுகளின் பரப்பளவு 18.88 வீதமாக குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன, இருப்பினும் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். [12]. உதாரணமாக, காரகன் லெவயா வாவியை அகழ்வதற்கு ஒரு பெரிய திட்டம் இருந்தது, அங்கு சுமார் 40,000 கன மீட்டர் மணல் அகற்றப்பட்டது. [13]
ஹம்பாந்தோட்டையில் ஏன் இந்தளவு கட்டாய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது? அதீத தன்னம்பிக்கை மற்றும் ஒரு தலைநகரை உருவாக்குவதன் மூலமும் குடும்ப மரபை உருவாக்குவதன் மூலமும் கடந்த கால மன்னர்களைப் பிரதிபலிக்கும் விருப்பம் காரணமாகவாகும். [14] 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடலோரக் காடுகளை மீண்டும் நடுகை செய்தல், [15] பழ பயிர்களை அறிமுகப்படுத்துதல், குளங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் நிலையான விவசாயப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பு முயற்சிகளை அம்பாந்தோட்டை பெற்றுள்ளது என்பது நேர்மறையான பக்கமாகும். முன்பு அழிக்கப்பட்ட சில பகுதிகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை எப்போதாவது ராஜபக்சக்கள் நினைத்தது போல் மாறுமா என்பது தெளிவாக இல்லை, ஆனால் குறைந்த பட்சம் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும் சரி செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது.
எடுத்துக்கொள்ளும் விடயங்கள்
இந்த வகையான பரந்த, விரிவான பகுப்பாய்வில் இருந்து எடுத்துக்கொள்ளும் விடயங்கள் எப்போதுமே சிறிது கசப்பானவையாகவே இருக்கும். ஒருபுறம், மக்கள் வாழ இடம் தேவை, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதன் சொந்த சிறிய பிரச்சினைகள் உள்ளன, அவை தீர்க்கப்பட வேண்டும். மனித வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றின் நுட்பமான சமநிலை, எந்தவொரு நியாயமான நபரும் பல தசாப்தங்களாக சிந்திக்கக்கூடிய ஒன்று, தாக்கங்களைக் கண்டறிவது ஒருபுறம் இருக்க, குறைந்த வரவு செலவுத்திட்டம் மற்றும் (வரலாற்று ரீதியாக) கொள்கையில் ஸ்திரத்தன்மையற்ற நாட்டில் இவை அனைத்தும் நடக்க வேண்டும்.
நாம் செய்யக்கூடிய சில வெளிப்படையான விடயங்கள் உள்ளன,
சட்டவிரோத மரங்கள் வெட்டுதல் மற்றும் காடுகளை அழித்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இது கட்டாயம் செய்யப்படல் வேண்டும்.
நகரங்களில் உயரமான கட்டடங்களை அமைத்தல் : இது செயற்கைக்கோள் படங்களிலிருந்து நாம் கவனித்த ஒன்று. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட இடம் கொழும்பு மட்டுமல்ல - மட்டக்களப்பின் சில பகுதிகள் கொழும்பை விடவும் நெருக்கடிமிக்கவையாகக் காணப்படுகின்றன. ஆனால் உயரமான கட்டிடங்கள் குறைவாகவே காணப்படுகின்றன, அதாவது ஏராளமான சிறிய, குறுகிய குடியிருப்புகள் கிடைக்கக்கூடிய சிறிய அளவிலான நிலத்தில் அமைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்யப்படுகினறது. செங்குத்தாக உயர்ந்த கட்டடங்களை அமைக்க உதவுவதன் மூலம் மக்களுக்கு விடயங்களை மிகவும் வசதியாக மாற்றலாம்.
விவசாய சீர்திருத்தங்கள் : இது இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். விவசாயம் தொடர்பான எங்கள் பணியில் நாம் கோடிட்டுக் காட்டியது போல, இலங்கையில் விவசாயப் பெருமை இருந்தபோதிலும், முழு விவசாயத் தொழிலையும் மிகைப்படுத்தலுக்கு ஏற்றதாக கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், நாம் அசாதாரணமான முறையில் உருவாக்கியுள்ளோம். அவர்கள் அதிக அளவு மனித உழைப்பைப் பயன்படுத்துகிறார்கள், அதிக தொழில்நுட்பத்தை அல்ல. எங்கள் தயாரிப்புகள் உருவாக்க அதிக செலவு ஏற்படுவது மட்டுமல்ல, நாட்டிற்கு உணவளிக்க தேவையான அளவில் மொத்தமாக அவற்றை உருவாக்க முடியவில்லை. அதே நேரம், விவசாயிகளுக்கும் இதனால் இலாபம் இல்லை. அவர்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதற்கிடையில், இந்த வீணான அமைப்பு நாட்டின் தட்டையான நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.
எதற்கு?
நான் தீவிரமான எதையும் பரிந்துரைக்கவில்லை. நாங்கள் விவசாய முறையை ஒழிப்பது பற்றியோ அல்லது அது போன்ற எதையும் பற்றியோ பேசவில்லை. ஆனால், ட்ராக்டர்கள் மற்றும் பயன்பாடுகள் போன்ற அடிப்படை விடயங்கள் கிடைக்கும் நிலையினை மேம்படுத்துவது, வாழ்க்கையை எளிதாக்குவது மற்றும் விவசாயிகளை அதிக உற்பத்தி செய்யும் வகையில் இதைச் செய்வதற்கு மிகவும் புத்திசாலித்தனமான வழி உள்ளது. பழைய நிலையான உள்ளீடு-வெளியீட்டு மாதிரியை ஒதுக்கிவிட்டு, செங்குத்து பண்ணைகள் மற்றும் சமூகத் தோட்டங்கள் போன்றவற்றை மொத்தமாக ஆராயத் தொடங்குவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம். ஹம்பாந்தோட்டையில் நாம் பார்த்தது போல, வழக்கமான ஒற்றைப்பயிர்களுக்கு அப்பால் வேறு பயிர்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயத்தை மேலும் நிலைபேறானதாக மாற்றுவதற்கான வழிகளும் உள்ளன. உதாரணமாக பழம் ஒரு நல்ல விடயமாகும், மற்றும் இந்த நாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை.
நாம் இந்த முறையில் நிலத்தை விட்டுக்கொடுக்கப் போகிறோம் என்றால், குறைந்த பட்சம் நாம் பரிசோதனை செய்ய வேண்டும், அதனால் எது திறம்பட செயல்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம், மேலும் எது நிலைபேறான பணி என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியும். அடுத்த பொருளாதார வீழ்ச்சியில் பட்டினிக்காக அரிசி மாத்திரம் பயிரிடுவதைத் தவிர வேறு எதையும் பயிர்களையும் உற்பத்தி செய்யும் சிறந்த வழி எம்மிடம் இருக்க வேண்டும்.
கடைசியாக, எங்களுக்கு கட்டட நிர்மாணம் தொடர்பான வழிகாட்டுதல்களும் குறிப்பாக பசுமையான இடங்களை உள்ளடக்கிய உண்மையான அமுலாக்கம் தேவை, நம் நாட்டின் இந்தப் படங்களைப் பார்க்கும்போது, சிறிய நகரங்களையும் பெரிய நகரங்களையும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் உருவாக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் உயிர்வாழ முதலில் கட்டுகிறோம். ஒவ்வொரு நகரத்தின் பொருளாதாரத்தின் எல்லையற்ற நடவடிக்கைகள் உருவாகின்றன. எரிபொருள் நிரப்பு நிலையம், திருமண வரவேற்பு மண்டபங்கள், ஆபரணங்கள் விற்பனை செய்யும் கடைகளின் எல்லையற்ற வரிசைகள், டியூசன் வகுப்புகள், பாதணி விற்பனை நிலையங்கள், அபான்ஸ் மற்றும் சிங்கர் காட்சியறைகள், பெரிய வீடுகள், மற்றும் வீதிகள் அகலப்படுத்தப்படுதல். ஒரு கட்டத்தில் நாம் சுற்றிப் பார்க்கிறோம், எல்லாமே பொரளையின் அமைப்புப் போன்று மோசமாக தெரிகிறது. இருப்பது சங்கடமாக இருக்கிறது, ஏனென்றால் அங்கு செல்வதற்கு நாங்கள் அங்கீகரிக்கப்படாத அல்லது பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யாத அனைத்தையும் வெட்டினோம். இது பிம்பங்களில் மட்டுமல்ல, நான் வாழ்ந்த ஊர்களில் - கொடகவெல முதல் ராகம வரை ஹொரணை வரையிலும் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.
சில சமயங்களில், எதிர்கால மக்கள் வெட்ட அனுமதிக்கப்படாத மரங்களின் நிழலில் உட்காரக்கூடிய வகையில், ஒழுங்குமுறைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பிற நாடுகளின் புத்தகங்களில் இருந்து பாடத்தைப் படிக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்: கொழும்பைப் போன்ற நகரங்களில் வாழ்கின்றோம், அங்கு பெரிய அளவிலான கொன்கிரீட் மற்றும் தார்களால் நம்பமுடியாத அளவு வெப்ப அழுத்தத்தைக் கொண்ட சூழலை உருவாக்கப்படுகின்றது [16][17]18]. பட்ட மரத்தினால் புகலிடம் அளிக்க முடியாது, கிரிக்கெட்டினால் ஆறுதலை வழங்க முடியாது அத்துடன் ஆடம்பரமான நிழலில் பொதுவாக அதிக விலையுள்ள பகுதிகளில் பணக்காரர்களுக்கு மட்டுமே வாழ்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் வெளிப்படையாக கருத்து மற்றும் கலந்துரையாடலில் இருக்கிறோம். இந்த முடிவு வலுவான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது, கண்ணியமான கல்வி மொழியின் பின்னால் ஒளிந்துகொண்டு, 'மேலும் ஆராய்ச்சி தேவை' என மென்மையாக கூறுவது போலியான கருத்தாகும்
References:
[1] The actual data files of course are too large to share in one place - a single image for a single year can span 6 gigabytes - but we have made reduced JPEG versions, still at very high resolution, available for free for you here on our Github.
[2] https://luppd.gov.lk/images/content_image/downloads/pdf/llrc_kilinochchi_district.pdf
[3] https://luppd.gov.lk/images/Kilinochchi_District_compressed.pdf
[4] https://www.harti.gov.lk/images/download/reasearch_report/new1/webR_238_Final_report.pdf
[5]
https://www.uda.gov.lk/attachments/dev-plans-2023-2033/killinochchi2024.pdf
[6] https://www.wfp.org/news/food-insecurity-improves-sri-lanka-prevails-within-specific-regions
[7] See our own reporting on the agricultural crisis
[8] https://www.adb.org/projects/37378-013/main
[9] https://www.adb.org/projects/50301-002/main
[10] Gunasena, H. P. M., & Pushpakumara, D. K. N. G. (2015). Chena cultivation in Sri Lanka: prospects for agroforestry interventionsna cultivation in Sri Lanka: prospects for agroforestry interventions. Shifting cultivation and environmental change: indigenous people, agriculture and forest conservation. Routledge, New York, 199-220.
[11] Kaushalya, G. N. (2023). Forest and Natural Vegetation Cover Loss Over 2000 to 2020 in Sri Lanka; A Canopy Density Base Analysis. In Proceedings of International Forestry and Environment Symposium (Vol. 27).
[12] Edirisooriya, K. V. U. I., Senevirathna, E. M. T. K., Dheerasinghe, G. W. M. M. K., & Dauglas, D. L. P. M. (2021). ANALYSIS OF LAND USE/LAND COVER CHANGES IN HAMBANTOTA DIVISIONAL SECRETARIAT DIVISION FROM 2008 TO 2019 USING REMOTE SENSING AND GIS TECHNIQUES.
[13] https://www.chathamhouse.org/2020/03/chinese-investment-and-bri-sri-lanka-0/2-labour-and-environment
[14] https://balkanecologyproject.blogspot.com/2024/05/discovering-tropics-hambantota-district.html
[15] https://www.agrimin.gov.lk/web/images/pdf/performance/2017-english-performence.pdf
[16] Fonseka, H. P. U., Zhang, H., Sun, Y., Su, H., Lin, H., & Lin, Y. (2019). Urbanization and its impacts on land surface temperature in Colombo metropolitan area, Sri Lanka, from 1988 to 2016. Remote Sensing, 11(8), 957.
[17] Emmanuel, R. (2005). Thermal comfort implications of urbanization in a warm-humid city: the Colombo Metropolitan Region (CMR), Sri Lanka. Building and environment, 40(12), 1591-1601.
[18] Dmdok, D., & Kakm, K. (2021). Urbanization of Colombo City and Its Impact on Land Surface Temperature from 2001-2019. American Journal of Environmental Protection, 10(3), 66-76.