காடுகளை காணுதல்
பேருவளைக்கு நேர் கிழக்கே வரைபடத்தில் கரும் பச்சை நிறத்திலான அடையாளம் காணப்படுகின்றது. அது சிங்கராஜ காட்டினை காட்டுகின்றது. காடுகள் அழிக்கப்படுவதாக யாராவது பேசினால், அது பெரும்பாலும் சிங்கராஜ காட்டில் நடைபெறுவதாகவே கருத வேண்டியிருக்கும், எப்போதாவது இது செய்திகளில் இடம்பிடிக்கும். இது இலங்கைக்கான பொதுவான சந்தைப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் - இது மழைக்காடுகள்! இயற்கை! தடங்கள்! காடுசார் களப் பயணங்கள்! உலக பாரம்பரிய தளம் என்ற வகையில் பார்க்கப்படுகின்றது.
ஆனால் துரதிஷ்டவசமாக, சிங்கராஜ காடு ஒரு குறுகிய மாற்றத்தினைப் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் சட்டத்தில் உள்ள ஓட்டைகள், பலவீனமான சட்ட அமுலாக்கம், ஊழல், முறையான EIA இல்லாமல் ஹோட்டல்கள் மற்றும் வீதிகள் அமைக்கப்படுதல், மற்றும் அங்குமிங்குமாக சட்டவிரோதமான முறையில் வளங்கள் எடுக்கப்படுதல் என்பவை சிங்கராஜ காட்டினை விவாதத்திற்குரிய இடமாக மாற்றியுள்ளன: சிங்கராஜ காட்டின் குடாவா நுழைவாயிலில் வருடா வருடம் வருகை தரும் பார்வையாளர்கள் மூலமாகக் கிடைக்கும் 30,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தினை சம்பாதிக்க வேண்டுமா?, அல்லது நாம் மரங்களையும் பறவைகளையும் மிருகங்களையும் அவை அவ்வாறே இருப்பதற்கு அனுமதிக்க வேண்டுமா?
கடினமான காலங்களை கடந்து கொண்டிக்கும் இலங்கையின் காடு சிங்கராஜா மட்டுமல்ல. கன்னெலிய - தெடியகல - நாகியதெனிய (KDN) காட்டுத் தொகுதி (KDN), கீழே மற்றுமொரு படத்தில் காட்டப்பட்டுள்ளது. சனத்தொகைப் பெருக்கம் மற்றும் பெரிய மற்றும் சிறிய அளவிலான தேயிலைத் தோட்டங்களை விரிவாக்கம் ஆகியவை காரணமாக KDN காடழிப்பிற்குள்ளாகின்றது [4], அது தற்போது சிதைந்த மழைக்காடாக காணப்படுகின்றது. தற்போது அரச-தனியார் கூட்டுமுயற்சியான, 12 ஹெக்டேர் காட்டுப் பகுதியினை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் பல்லுயிர்த்தன்மை முயற்சிகளால் KDN மற்றும் மெதுவான அழிவுக்குள்ளாகிவரும் காட்டுப்பகுதிகளை பாதுகாக்க முடியும்.[5][6].
நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட காடு (KCF) தற்போது மிக மோசமாகக் காணப்படுகின்றது. சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதோடு காடழிப்பும் இடம்பெறுகின்றது. குறிப்பாக தேயிலை மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் காரணமாக ஏற்படுகின்ற அழுத்தம் மேல் மண்ணை அழித்து காட்டினை அழிக்கின்றது. வீதிக் கட்டுமானப் பணிகள் வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கு குந்தகமாக அமைவதோடு மைக்ரோக்ளைமேட்களை சீர்குலைக்கிறது. நீரை அதிகமாக பிரித்தெடுத்தல் - ஆம், நக்கிள்ஸ் மினரல் வோட்டர் - நீர் மூலங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றதுது. ஒழுங்குபடுத்தப்படாத வகையில் சுற்றுலா துறையில் இலாபம் ஈட்டுவதனை மாத்திரமே இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து குடிசைத் தொழில்களும் இங்கு காணப்படுகின்றன – மலிவான சேவையினை வழங்கும் Airbus சேவை தொடக்கம் பிரம்மாண்டமான கழிவு முகாமைத்துவ சிக்கல் வரை மெதுவாக அந்தப் பகுதியில் உருவாகிறது
செய்திகளில் நக்கிள்ஸ் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்படாதிருப்பீர்கள், ஆனால் அது ஆய்வுக்குட்படுத்தப்படுவது காரணமாக இருக்கலாம். சிறந்த ஆய்வு 2018 [8] இல் மேற்கொள்ளப்பட்டது, அதன் பின்னர் 'சுற்றுலா விழுமிய சங்கிலித்தொடர் பகுப்பாய்வு' பெரும்பாலும் [9] இடம்பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது, நிலைபேறான தன்மை தொடர்பிலான கல்விசார் கதையாடல்கள் இங்கும் அங்கும் காணப்படுகின்றன. [10].
மேல் மண்ணை சேதப்படுத்துவதில் பெயர் பெற்ற சுற்றுலா மற்றும் தேயிலைத் தோட்டங்கள் தவிர அருகிலுள்ள களுகலவிலும் இதே போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன, ஆண்டுதோறும் காட்டுப் பகுதியின் மேல்பரப்பு மெதுவாக மாற்றமடைந்து வருகின்றது [11] ஆனால் களுகல நக்கிள்ஸை விட மிகவும் குறைவாகவே பாதிப்பினை எதிர்கொள்கின்றது.
ஈர வலயத்தில் உள்ள மற்றொரு முக்கியமான மழைக்காடு, யகிரலாவாகும், விவசாய நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்கள் அந்த இடத்தைக் காப்பாற்ற முயல்கின்றன, மேலும் ஜயவர்தனபுர மக்களுடன் கொமர்ஷல் வங்கியும் இதில் கூட களமிறங்கியுள்ளது [12][13][14].
எங்கள் சுருக்கமான பட்டியலில் கடைசியாக இருப்பது. இலங்கையில் உள்ள ஆறு RAMSAR சதுப்பு நிலங்களில் ஒன்றான, அனவிலுந்தவ ஈரநில சூழல் அமைப்பு. இது பெரியதொரு பறவைகள் சரணாலயமாகும். ஆனால் இதனை வார்த்தையால் உச்சரிக்கும் போது இனிமையான காடாக இருந்தாலும், அது தற்போது வெப்பமான, வறண்ட நரகமாகக் காணப்படுகின்றது.
வருடம் முழுவதும் விவசாயத்துடன் தொடர்புபட்ட காடழிப்பு கடுமையான வாழ்விடங்கள் இல்லாமல் போவது தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக: இப்பகுதியில் நீர்ப்பாசனத்திற்கான ஒன்பது குளங்கள் காணப்படுகின்றன. சதுப்பு நிலத்தை இயற்கையான முறையில் நனைத்து உலர வைப்பதற்குப் பதிலாக, விவசாயிகள் குளக் கட்டமைப்பினை ஆண்டு முழுவதும் செயலூக்கத்துடன் வைத்திருக்கிறார்கள், இதனால் கும்புக் மரங்கள் மற்றும் கண்டல் தாவரங்கள் மூழ்கடிக்கப்பட்டு - இறுதியில் அவை அழிக்கப்பட்டுவிடுகின்றன. அனவிலுந்தாவவில் இயற்கையான கண்டல் தாவர மீளுருவாக்கத் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க போதுமான கண்டல் தாவரங்களை நடுகை செய்வதில் அசமந்தப் போக்கு காணப்படுகின்றது. இதில் மறைமுகமாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை. நாம் அதனை மிகவும் மோசமாகப் பாதிப்படையச் செய்துள்ளோம். [15][16][17]
உண்மையாகச் சொன்னால், விண்வெளியில் இருந்து பார்த்து, இது ஒரு காட்டுப் பகுதி என கூறுவது கூட கடினமாகும்.
சந்தர்ப்ப சூழல்
இங்கு இரண்டு பெரும் சக்திகள் செயல்படுகின்றன. முதலாவதாக, இலங்கை, நம் காடுகளுக்கு அனைத்து விதத்திலும் தீங்கு விளைவிக்கின்றோம். தொடர்ந்தும் பசுமையான நாடாகவே இருக்கின்றது. அதை அப்படியே பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதாவது உலகத்தினால் விதிக்கப்படும் கடமைகள் என்ற வகையில் அல்ல, இந்த நாட்டை வீடாக நேசிக்கும் உயிரினங்களுக்கு ஒரு இடம் தேவை என்பதற்காக.
இரண்டாவது சக்தி வாழ்வாதாரம். இவை அனைத்திலும் இயங்கும் பொதுவான கருப்பொருள் என்னவென்றால், மக்கள் வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள், மேலும் தெளிவான சட்டங்கள் மற்றும் அமுலாக்கங்களை கருத்திற்கொள்ளாமல் தான்தோன்றித் தனமாக செயற்படுகின்றார்கள்.
உண்மையில், இந்த உரையாடலின் இப் பக்கத்திற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று பேராசை. 'சுற்றுச்சூழல் சுற்றுலா' என்ற போர்வையில் இடைவிடாத மற்றும் பொறுப்பற்ற விதத்தில் சுற்றுலாத் துறையானது செயற்படுத்தப்படுகின்றது. மோசமான திட்டமிடல், குப்பைகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் மற்றும் முறையான அனுமதி போன்ற முக்கியமான பொதுச் சேவைகள் போதியளவு கிடைக்காமை - இவை அனைத்தையும் விரைவான முறையில் பணத்தினை உழைத்துக் கொள்வதற்காக மேற்கொள்வது மெதுவான பேரழிவு ஆகும். இதுவே பேராசை எனக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் உள்ள பலரைப் பொறுத்தவரை அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான தெரிவுகள் மிகக் குறைவு. பெரும்பாலும், உயிர்வாழ்வது என்பது இயற்கைக்கு தீங்கு விளைவித்தாலும்கூட சுற்றுச்சூழலில் இருந்து நேரடியாக வளங்களை எடுத்துக்கொள்வதாகும். இலங்கையின் இயற்கையான பிரதேசமான அனவிலுந்தவ இந்தப் பிரச்சினைக்கு சிறந்ததொரு உதாரணமாகும். ஒரு மரத்தைப் பாதுகாப்பதற்கும், உங்கள் குடும்பம் உயிர்வாழ்தலை உறுதிப்படுத்துவதற்கும் இடையே தெரிவொன்றைச் செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
இந்த சிக்கலான பிரச்சினைகள் இருந்தபோதிலும், நாம் எமது காடுகளை சிறந்த முறையில் பேணுகின்றோம் என்பதை விடவும், நம் காடுகள் தாமாகவே தம்மைத்தாமே சிறந்த முறையில் பேணிக்கொள்கின்றன. நான் ஒவ்வொரு தடவையும் வெளிநாடு சென்று திரும்பும்போதும் அந்த பசுமைதான் முதலில் என்னைத் கவர்கின்றது.
இது வெறும் தோற்றம் அல்ல. அமெரிக்க உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) 1946 ஆம் ஆண்டு தொடக்கம் 5 முதல் 10 வருட இடைவெளியில் உலக காடுகளை கண்காணித்து வருகிறது. நாங்கள் இங்கு பேசிய அனைத்து சேதங்கள் இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவை மாற்ற முடியாத பிரச்சனைகள் அல்ல என்று அவர்களின் தரவுகள் தெரிவிக்கிறன. 2010ஐ விட 2020ல் அதிக ஹெக்டேர் காடுகளைக் கொண்டிருந்தோம். மேலும் 1990ஆம் ஆண்டின் அளவினை எட்டவில்லை என்றாலும், நாடு மிகப்பெரிய நகரமயமாக்கலுக்குச் சென்றாலும் (பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களை சுற்றிலும் பசுமைக்கு மிகவும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டாலும், நாங்கள் இன்னும் 90 வீதம் நன்றாகவே இருக்கிறோம்).
இந்த சரிவு இருந்தபோதிலும், 2015-2020 க்கு இடையில் ஆண்டு நிகர மாற்ற விகிதம் -0.15 வீதமாகும், இலங்கை இன்னும் கணிசமான காடுகளை பராமரிக்கிறது. இந்த காடுகளில் பெரும்பாலானவை (1,863,210 ஹெக்டேர்) இயற்கையாகவே மீளுருவாக்கம் செய்கின்றன, அதேவேளை, 249,810 ஹெக்டேர் நடப்பட்ட காடுகளாகும். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, பெரும்பாலான காடுகள் (1,775,820 ஹெக்டேர்) அரச உரிமையின் கீழ் இருந்தன, சிறிய பகுதி (181,570 ஹெக்டேர்) தனியாருக்குச் சொந்தமானது. 2020 ஆம் ஆண்டு வரை பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் 1,258,370 ஹெக்டேர் (59.11 வீத காட்டுப்பகுதி) கொண்ட காடுகளைப் பாதுகாப்பதில் இலங்கை கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இல்லை, ஆனால் சில பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது.
தரவுகளை சேகரித்து பயன்படுத்துவதில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. பொதுவான, நாடு தழுவிய புள்ளிவிவரங்கள் குறிப்பிட்ட சிக்கல்களைத் தீர்க்கும் போது பெரிதும் உதவாது. காடுகள் அல்லது வளங்களின் அடிப்படையில் எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது என்பது பற்றிய தெளிவான, துல்லியமான புரிதல் எங்களிடம் இல்லை. அவற்றை யார் சேகரித்தார்கள் என்பதைப் பொறுத்து எண்ணிக்கைகள் மாறுபடுகின்றன. வெவ்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு வழிகளில் தரவைச் சேகரிப்பதாலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான தரவைச் சேகரிப்பதற்கான வலுவான, நிலையான முயற்சி இல்லாததும் இதற்குக் காரணமாகும்.
தி மோர்ணிங் செய்தித்தாளின் 2024 கட்டுரையில் உலக மழைக்காடுகள் என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை இதற்கு உதாரணமாக, குறிப்பிடலாம்.[19]
இது UNFCCC [20] அல்லது பிரபலமான அணுகுவழியான குளோபல் பொரஸ்ட் வாட்ச் [21] க்கு இலங்கையின் காடுகள் தொடர்பான குறிப்புகளுடன் ஒத்துப்போவதில்லை. நிச்சயமாக, அரசாங்கத் தரவுகளை நேரடியாகப் பார்க்கும்போது, இதுபோன்ற மூன்றாம் தரப்பு புள்ளிவிவரங்களை நாம் ஏன் நம்ப வேண்டும் என்று ஒருவர் கேட்கலாம், இதற்கு பதில் என்னவென்றால், இலங்கையின் சொந்த வனத் திணைக்களம் எல்லாக் காலத்திலும் மிகவும் பயனற்ற இணையத்தளத்தைக் கொண்டுள்ளது, இது உண்மையான புள்ளிவிவரங்கள் ஒருபுறமிருக்க, பயனுள்ள எதையும் பதிவு செய்யவில்லை [22] இதற்கிடையில், வனவிலங்கு மற்றும் வன பரிபாலன அமைச்சு உண்மையான புள்ளிவிபரங்களை வெளிப்படுத்துவதை விட அதன் பங்களாக்கள் மற்றும் வெளியீடுகளையே அதிகம் விளம்பரப்படுத்துகிறது [23].
வனவியல் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் பல அரசு நிறுவனங்கள் இருந்தாலும், ட்ரோன்களைப் பயன்படுத்தும் ஒரு சிறிய குழுவைப் போலவாகிலும் பெரும்பாலும் பயனுள்ளதாக இல்லை. வனவியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதல் படி, அவை எங்கு நிகழ்கின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதாகும், இதற்கு மாற்றங்களுக்காக காடுகளை தவறாமல் சரிபார்ப்பது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிவது அவசியம். இப்போதெல்லாம், காடுகளைக் கண்காணிப்பதை எளிதாக்கும் செயற்கைக்கோள்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற மலிவான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. உண்மையில், இதுவரை பயன்படுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள் படங்களும் இலவசம், மேலும் நீங்கள் ஒரு வாகனத்தின் விலைக்கு (மகேந்திரா பொலிரோ போன்ற) அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை கொள்வனவு செய்யலாம். நமது காடுகளைப் பற்றிய சிறந்த தரவுகள் பெரும்பாலும் பிற நாடுகளில் இருந்து வருகிறது, நமது சொந்த கண்காணிப்பு முயற்சிகளால் அல்ல என்பது ஏமாற்றமளிக்கிறது.
இரண்டாவது பிரச்சனை காணிப் பராமரிப்பு தொடர்பான தெளிவான திட்டங்கள் மற்றும் பொறுப்புகள் இல்லாமையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விடயங்கள் தவறாக நடக்கும்போது குறிப்பிட்ட நபர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அரசாங்க அதிகாரிகளிடம் உரையாடும் போது, எவ்வளவு காட்டு நிலத்தை அரசு கட்டுப்படுத்துகிறது என்பது கூட அரசுக்குத் தெரியாது என்பது ஆச்சரியமளிக்கின்றது வெவ்வேறு திணைக்களங்கள் வெவ்வேறு நிலங்களைச் சொந்தமாக வைத்துள்ளன, மேலும் பழைய அரசாங்கப் பதிவுகள் வர்த்தமானிகள் வலயங்களை உருவாக்கியுள்ளன, அவை சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று அல்லது இப்போது காலாவதியானவை. இதன் விளைவாக, அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் பெரும்பாலும் இந்த காட்டுப் பகுதிகளைப் பற்றிய தெளிவற்ற மற்றும் காலாவதியான தகவல்களை மட்டுமே கொண்டிருக்கின்றன, அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் உண்மையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிய வேண்டும்.
இதற்கான ஒரு பகுதி தீர்வாக, இயற்கையைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள மக்களின் உள்ளூர் குழுக்களை பலப்படுத்தல். உதாரணமாக, அனவிலிந்துவவில் உள்ள வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (WNPS) இப் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது, மேலும் Biodiversity Sri Lanka அமைப்பு சேதமடைந்த மழைக்காடுகளை மீட்டெடுக்க உதவுகிறது. கிராம அதிகாரிகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் இந்த யோசனையை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும். அதனால் அவர்கள் தங்கள் உள்ளூர் காடுகளைப் பராமரிக்க உதவ முடியும். இதன் மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு அவர்களின் அருகிலுள்ள வனப்பகுதிகளை ஆரோக்கியமாக நன்கு நிர்வகிக்க முடியும்
மூன்றாவது தீர்வு வலுவான சட்டங்கள் : சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் நிலத்தை அபகரிப்பதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை, அவற்றை தடுப்பதற்கான கடுமையான தண்டனைகள். தற்போதைய சட்டங்களில் உள்ள ஓட்டைகளை இல்லாமல் செய்தல்;, இந்தச் சட்டங்கள் உண்மையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அரசாங்க அமைப்புகள் காடுகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும், சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பதில்லை. தற்போது, இந்த முகவரகங்களில் சில, பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், சுற்றுலாவை நிருவகிப்பது போன்ற முரண்பட்ட இலக்குகளைக் கொண்டுள்ளன. இதில் தேவைப்படுவது என்னவெனில் வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் — வெவ்வேறு நிறுவனங்களில் கலவையான நோக்கங்களைக் கொண்டிருக்காமல், காடுகளைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துதல் வேண்டும். அவ்வாறில்லாதவிடத்து, இலங்கையின் காடுகள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக தீங்கு விளைவிப்பவர்களால் ஆபத்தினை எதிநோக்க வேண்டிய நிலையிலேயே இருக்கும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் [3] என இளம் சட்டத்தரணிகள் குழு பரிந்துரைத்துள்ளது என கொழும்பு டெலிகிராப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமானதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் சரியான விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். இவை நாம் சரிசெய்யக்கூடிய சிக்கல்களாகும் நாம் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
References
[1] https://www.sanctuarynaturefoundation.org/article/sinharaja---the-heart-of-south-asian-biodiversity
[2] https://www.dailymirror.lk/news-features/Sinharaja-suffers-from-tourist-development/131-162284
[4] Lindström, S., Mattsson, E., & Nissanka, S. P. (2012). Forest cover change in Sri Lanka: The role of small scale farmers. Applied Geography, 34, 680-692.
[5] https://www.sundaytimes.lk/230723/plus/new-life-for-kanneliyas-degraded-rainforest-525836.html
[6] https://biodiversitysrilanka.org/the-life/
[7] Botejue, W. M. S., & Wattavidanage, J. (2012). Herpetofaunal diversity and distribution in Kalugala proposed forest reserve. Western province of Sri.
[10] Ruzaik, F. (2023). Appraising the Ecotourism Potentials of the Knuckles forest Reserve to Preserve its Sustainability.
[11] Botejue, W. M. S., & Wattavidanage, J. (2012). Herpetofaunal diversity and distribution in Kalugala proposed forest reserve. Western province of Sri.
[12] https://sustainability.sjp.ac.lk/yagirala/
[16] https://www.defence.lk/Article/view_article/4945
[17]https://ceylontoday.lk/2024/05/04/saving-anawilundawa/
[19] https://www.themorning.lk/articles/B0dVupNYGLc3piwvyeOK
[20] https://redd.unfccc.int/media/sl_frl_modified_submission_november_2017.pdf
[21] https://www.globalforestwatch.org/dashboards/country/LKA/?location=WyJjb3VudHJ5IiwiTEtBIl0%3D
[22] https://forestdept.gov.lk/index.php/en/#
[23] https://www.mwfc.gov.lk/department-of-forest-conservation/